(Reading time: 23 - 46 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

இல்லை இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன் நான் இப்பவே இதைப்பத்தி தாத்தாகிட்ட பேசப்போறேன்

  

என்ன பேசப்போறீங்கன்னு சொல்லுங்கண்ணா

  

உண்மையை பேசறேன்

  

அதான் அந்த உண்மை என்னஎன கேட்க ரிஷிக்கு வார்த்தையே வரவில்லை

  

அண்ணா லைன்ல இருக்கீங்களா இல்லையா ஹலோஎன கத்த அவனும்

  

இருக்கேன் இருக்கேன் சொல்லு

  

பதில் சொல்லுங்கண்ணா, இப்ப நீங்க தாத்தாகிட்ட பேச போனாலும் என்ன பேசுவீங்க, கல்யாணம் வேணாம்னா ஆனா அவர் அதை ஒத்துக்கமாட்டாரே, அவரே ஒத்துக்கிட்டாலும் உங்கம்மா பாட்டி அப்பா 3 பேரும் ஒத்துக்கமாட்டாங்க, இத்தனை வருஷமும் கல்யாணம் செஞ்சிக்க மாட்டேன்னு டிமிக்கி கொடுத்துட்டு வந்தீங்கள்ல இப்ப வசமா மாட்டிக்கிட்டீங்க உங்களால இனிமேல வெளிய வரவே முடியாது” என்றான் குதூகலமாக

  

இல்லை நான் இதை தடுத்தாகனும்

  

எதை சொல்லி தடுப்பீங்க

  

அது தான் தெரியலை சரி அந்த பிரச்சனையை விடு அதை நான் பார்த்துக்கறேன் நீ எப்ப நந்தினியை பார்க்கப்போற

  

நானா நான் இன்னிக்கு போகலை நாளைக்கு போகலாம்னு இருக்கேன்

  

சரி அவள் இருக்கற ஹாஸ்டல் பேராவது சொல்லு நான் போய் பார்க்கறேன்

  

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.