(Reading time: 23 - 46 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

அதுக்கு அவங்க ஒத்துக்க மாட்டாங்க

  

இதுல ஒத்துக்க என்ன இருக்கு நான் கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருக்கனும்னு ஆசைப்பட்டா ஒத்துக்குவாங்க யாரையோ கல்யாணம் பண்ணி நான் நாசமா போகனுமா

  

நீ ஏன் அப்படி நினைக்கற ஒரு வேளை வர்ற 3 பொண்ணுங்கள்ல உனக்கு பிடிச்ச பொண்ணும் இருக்கலாமே

  

அதுக்கு வாய்ப்பேயில்லை தாத்தாஎன அவன் உறுதியாக சொல்லவும் அவனையே சில நொடிகள் ஆழமாக பார்த்துவிட்டு மெதுவாக அவனிடம்

  

நீ யாரையாவது விரும்பறியா ரிஷிஎன கேட்க சட்டென அதிர்ந்தவன் உடனே சாந்தமாகி

  

அப்படி யாரையும் நான் விரும்பலை தாத்தா நான் கிளம்பறேன்

  

எங்க போற

  

அது அர்ஜூன் வரசொன்னான் நான் போகனும்என சொல்லிவிட்டு கிளம்ப நினைக்கையில் அர்ஜுனே வந்தான்

  

தாத்தாஎன பாசமாக அழைத்துக்கொண்டே உள்ளே வந்து அவரின் முன்பு நின்றான்

  

வாடா வா உன்னை பார்க்க ரிஷியே கிளம்பறான் நீ வந்திருக்க

  

நானா என்னை தேடி அண்ணா ஏன் வரனும்

  

நீதான் வரசொன்னியாமே

  

நான் சொல்லலையே தாத்தாஎன சொல்லவும் ரிஷியை இருவருமே சந்தேகத்துடன் பார்க்க அவன் திருதிருவென விழித்தான். அவனின் பார்வையைக் கண்டு சந்தேகப்பட்ட தாத்தா

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.