இவர்களுக்கு தெரிந்த கிருத்திகாவிற்கும் இப்போது இருப்பவளுக்கும் மிக பெரிய வேறுபாடு இருக்கிறது...! ஒருவேளை இவர்கள் மனம் எல்லாம் கொஞ்சம் சந்தோஷப் பட தான் கடவுள் பழைய நினைவுகளை மறக்கடித்தாரோ என்னவோ...!
அவள் யோசனையில் இருக்க, செவ்வந்தி தட்டுக்களில் ஏதேதோ நிரப்பி எடுத்துக் கொண்டு வந்தாள்.
கஸ்தூரி அவசரமாக ஓடிச் சென்று அவளின் கையில் இருந்த தட்டுக்களை வாங்கி எடுத்து வந்து டேபிளில் வைத்தாள்.
“என்னம்மா நீங்க! நான் இருக்கும் போது நீங்க இதெல்லாம் செய்துட்டு இருக்கீங்க... “
“உனக்கும் ரெஸ்ட் வேணுமே கஸ்தூரி... எப்படி இருக்கான் உன் பையன்?” என கஸ்தூரியிடமும் அன்புடனே விசாரித்தாள் செவ்வந்தி.
“நல்லா இருக்கான்ம்மா... நீங்க உட்கார்ந்து உங்க மருமக கூட பேசுங்க, நான் கிச்சன்ல வேலையை பார்க்குறேன்...”
“வேண்டாம் கஸ்தூரி...”
“அம்மா...!”
“சரி சரி, சாப்பிட்டுட்டு போய் செய்...”
கஸ்தூரிக்கும் செவ்வந்திக்கும் இடையே நடந்த உரையாடலை சுவாரசியத்துடன் பார்த்திருந்தாள் கிருத்திகா.
“எடுத்து சாப்பிடுடா கிருத்திகா... இது நானே செஞ்ச முறுக்கு...” என்று செவ்வந்தி சொல்ல,