“என்னடா இவ இப்படி பூதம் புதையல் காக்குற மாதிரி எடுத்து வச்சிருக்காளேன்னு பார்க்குறீயா? என்ன செய்ய, எனக்கு ஒரே மகன்... அவனுடையது எதையும் தூக்கி போட மனசு வரலை... இதை பார்க்கும் போதெல்லாம் எப்போடா அவனுடைய குழந்தையை தூக்கி செல்லம் கொஞ்சுவோம்னு தோணும்... அந்த ஆசையில தான் உன் கிட்ட ஏதேதோ பேசிட்டேன்...”
அவளின் கையை பிடித்துக் கொண்டு பேசிய செவ்வந்தியை வாஞ்சையுடன் பார்த்த கிருத்திகா,
“என்ன அத்தை, நீங்க போய் என் கிட்ட இப்படி பேசுறீங்க? நீங்க கேட்டதில் எந்த தப்பும் இல்லை,” என்றாள் தேற்றும் விதத்தில்!
“எனக்கு தெரியும் நீ இப்படி தான் சொல்வன்னு... எல்லாம் அந்த தியாகு செய்ற வேலை... என்னை உன் கிட்ட பேச விடாமல் தடுத்து வச்சிருந்தான்...”
தியாகு ஏன் அப்படி செய்திருப்பான் என்று ஓரளவிற்கு ஊகிக்க முடிந்ததால்,
“அப்படி இருக்காது அத்தை...” என்றாள் கிருத்திகா!
“இல்லைடா... அவனுக்கு எல்லாத்திலேயும் பிடிவாதம்... அன்னைக்கு வேரூர்ல அந்த டாக்டர் சொன்னதை கேட்டு எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்தது... என்ன நினைக்க, என்ன சொல்லன்னு ஒன்னும் புரியலை... உனக்கு ஏன் அப்படி கோபம் வந்ததுன்னும் அப்போ தான் புரிஞ்சது...”
“ம்ம்ம்ம்... பழசெல்லாம் மறந்திருவோம் அத்தை... விடுங்க...”
“நீ சொன்னா சரிடா... ஆனால் தியாகு பிடிவாதக்காரனா, கோபக்காரனா இருந்தாலும் கொஞ்சம் நல்லவன் தான்... அவனை...”
செவ்வந்தி பேசி முடிக்கும் முன், அவளின் கையை பற்றி குறுக்கிட்ட கிருத்திகா,
“உங்க கொஞ்சம் நல்ல மகனை பத்தி எனக்கும் நல்லா தெரியும்... நீங்க கவலையே