இருக்கீங்களா?”
“க்கும்... நான் எப்போ அவரை மயக்கினேன்... எந்திரன் படத்துல வந்த ரோபோ ரஜினிக்கு கூட காதல் வந்தது, உங்க அண்ணாக்கு சுத்தம்...”
“ஏன் என்னால இதை நம்பவே முடியலை???”
“நம்பாதே... போ... அவருக்கு இந்த ஹோட்டல் தவிர வேற எதுவும் ஞாபகமே இல்லை...”
“சரி சரி அலுத்துக்காதீங்க... நான் அன்னைக்கு சொன்னது மாதிரியே அம்மாவை இங்கே கொஞ்ச நாள் அனுப்புங்க... அப்போ அண்ணாக்கு எல்லாத்துக்கும் உங்க ஹெல்ப் தேவை படும்...”
“வேண்டவே வேண்டாம்மா... இப்போவாவது அத்தை சொல்றதுக்காக எனக்கு வேலை கம்மியா தரார்... அவங்க இங்கே இல்லைனா, எல்லா வேலையையும் மொத்தமா என் தலையில கட்டிடுவார்...”
“அண்ணாவை இப்படி இருக்க விட கூடாதே... “
“கூடாது தான் என்ன செய்றது... நானும் அவருக்கு சாப்பாடு தொடங்கி புதுசு புதுசா ஏதேதோ செய்து பார்த்துட்டேன்... ஹுஹும்... அவருக்கு என் ஞாபகம் கூட எப்போவாவது தான் வருது...”
“ஒன்னு செய்ங்க, பேசாம நீங்களும் அவரை கண்டுக்காம இருந்துப் பாருங்க...”
“சுத்தம்...! சரியா சாப்பிடக் கூட மாட்டார்...”
“சாப்பாடு தராதீங்கன்னா சொல்றேன்... டைமுக்கு சாப்பாடு கொடுங்க, என்ன, நீங்க சமைச்சு கொடுக்காதீங்க... முருகனையோ, டேவிடையோ செய்து கொடுக்க சொல்லுங்க...”
“ஹ்ம்ம்ம்...”