சில வினாடிகளுக்கு முன் வரை அங்கே நிறைந்திருந்த சந்தோஷ உணர்வுகள் காணாமல் போய் விட்டது தியாகரஜனுக்கே புரிந்தது...
ஆனாலும், அவன் விழிகளை திருப்பி கிருத்திகாவை பார்க்கவில்லை...
பார்க்கும் தைரியம் சுத்தமாக அவனுக்கு இல்லை...
சந்தோஷத்துடன் துள்ளி விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தை மீது சுடுநீரை ஊற்றுவதைப் போல வார்த்தைகளால் அவளை கஷ்டப் படுத்தி விட்டு, எப்படி பார்ப்பது?
மேலும் சில வினாடிகள் அமைதியில் கரைந்தது...
திடீரென கிருத்திகாவின் குரல் ஒலித்தது...
“நீங்க சொல்றது சரி... நான் உங்க வைஃப் இல்லை... வேணும்னா கீப்ன்னு நினைச்சுக்கோங்க...”
சட்டென கோபம் பொங்க, திரும்பி, அவளைப் பார்த்தான் தியாகராஜன்...
“என்ன பேசுற நீ???”
அவனின் வார்த்தைகளும் கோபமாக வெளி வந்தது...
ஆனால் அவன் நினைத்ததுப் போல கிருத்திகா வருத்தத்துடனும் இல்லை... இப்போது அவன் சொன்னதை கேட்டு பயப் படவுமில்லை!
அவன் மதியை மயக்கும் ஒரு அழகிய புன்னகையுடன், அவனையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள்!
குழம்பிப் போனாலும், அவளை விட்டு பார்வையை திருப்ப முடியாமல் அவனும் அவளையே