(Reading time: 24 - 48 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

நந்தினியிடம் பேச முடியாமல் போவதை நினைத்து நினைத்து அவன் மனது எரிய ஆரம்பித்தது.

  

அவனால் என்ன செய்ய முடியும் என தோன்றாமல் போக அவசரமாக அர்ஜூனை நேரில் காணவே சென்றான்.

  

கம்பெனியில் வேலையாக இருந்தவனை பிடித்து இழுத்து தன் காரில் ஏற்றிக்கொண்டு கெஸ்ட் ஹவுஸ் வந்தவன் அவனிடம் கத்தினான்

  

நான் நந்தினி கிட்ட பேசனும்

  

சரி பேசலாம் ஆனா என்ன விசயம்னு சொல்லுங்கண்ணாஎன கூலாக கேட்டவனின் கன்னத்தில் பளார் என அறைந்தான் ரிஷி

  

இங்க ஒரு மனுஷன் வாழ்வா சாவான்னு போராடிக்கிட்டு இருக்கான், உனக்கு நக்கலா இருக்காடா போ போய் அவளை கூட்டிட்டு வா இல்லை இங்கிருந்து நான் ஓடிடுவேன் அப்புறம் யாராலயும் என்னை தேடமுடியாது

  

என சொல்ல அவசரமாக எழுந்தவன் வெளியே சென்றான்.

  

அரை மணி நேரம் கழித்து வீட்டுக்குள் நுழைந்த நந்தினியை கண்டதும் சந்தோஷ மிகுதியில் ஓடிச்சென்று அவளை கட்டியணைத்துக் கொண்டான், நந்தினிக்கு என்ன சொல்வதென தெரியாமல் விழித்தாள். அவளுக்கு பயமாக இருந்தது, பக்கத்தில் அர்ஜூன் வேறு இருந்தான். என்ன செய்வது என தெரியாமல் அமைதியாக நின்றுவிட்டாள்.

  

மெதுவாக அவளை விட்டு விலகி நின்ற ரிஷி அவள் கையை கெட்டியாக பிடித்துக்கொண்டான்.

  

அண்ணாஎன அர்ஜூன் அழைக்க

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.