”எனக்கு ஏன் போன் பண்ணலை”
”அத்தான் எனக்கு உங்க நெம்பர் தெரியாது”
”தெரியலைன்னா கேட்க வேண்டிதுதானே தந்திருப்பேனே”
“எப்படி கேட்றது அத்தான்”
“வீட்டை விட்டு போறப்ப கேட்டிருந்திருக்கனும்”
“என்னால உங்களுக்கு பிரச்சனை வேணாம்னு தான் கேட்கலை”
“அதுக்கு ஒரேடியா மறந்துடுவியா நீ”
“இல்லை அத்தான் நான் மறக்கலை நீங்க தான் எனக்கு போன் பண்ணலை என்னைப்பார்க்க ஹாஸ்டலுக்கு வரலை”
“நீ எங்க இருக்கன்னு உன் அண்ணன் என்கிட்ட சொல்லலை தெரியுமா”
“தெரியாது அத்தான்” என அவள் குரல் தழுதழுக்கவும் அதற்கு மேல் ரிஷியால் கோபமாக பேச முடியாமல் அமைதியாக பேசினான்
”சரி நீ எந்த ஹாஸ்டல்ல இருக்கேன்னு சொல்லு நான் வந்து பார்க்கறேன்”
”அது” என அவள் சொல்லும் போதே லைன் கட்டாகி அர்ஜூன் வந்தான்
”அண்ணா” என கத்தினான்
”நீ ஏண்டா வந்த”