(Reading time: 24 - 48 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

  

சரி அப்ப அவள்ட்ட கேளு

  

எனக்கு பயமாயிருக்கு

  

இப்படி சொன்னா எப்படிடா இதப்பாரு பேசினாத்தான் பிரச்சனை தீரும்னா பேசறது தப்பில்லையே

  

பயமாயிருக்கு தாத்தா

  

நீயாடா பயப்படற எத்தனை பிசினஸ் மீட்டிங் எத்தனை டீலிங் பாரத்திருக்க பெரிய பெரிய தொழிலதிபர்களை நீ ஆட்டிவைச்சி பயமுறுத்தி விரட்டியிருக்க ஒரு பொண்ணுகிட்ட பேச தயங்கற

  

என் கஷ்டம் உங்களுக்கு புரியாது தாத்தா. அவளும் எதுவும் சொல்லமாட்டேங்கறா நானா எப்படி புரிஞ்சிக்கறது

  

நீ கேட்டாதானே அவள் சொல்வா

  

நான் கேட்டு அவள் வேற மாதிரி சொல்லிட்டா

  

இப்படி நீ நினைச்சா நான் சொல்ல எதுவும் இல்லை நம்பிக்கையா அவள்கிட்ட போய் பேசு

  

எப்படி பேசறது அந்த அர்ஜூன் அவள் எங்க இருக்காள்னு கூட சொல்ல மாட்டேங்கறான் போன் நெம்பரும் தரமாட்டேங்கறான்

  

அப்படியா அவன் செய்றதும் சரிதான் ஏன்னா உன்னை மாதிரி ஒரு குழப்பவாதிக்கு அவளை கல்யாணம் செஞ்சிக்கொடுக்க பயப்படறான். உன்னை நம்பி அவளைவிட்டா நீ அவளை ஒழுங்கா பார்த்துக்க மாட்ட

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.