(Reading time: 24 - 48 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

உனக்காக என்னால காத்திருக்க முடியாதுடா நான் போறேன் எதுவாயிருந்தாலும் நான் வீட்டுக்கு வந்தபின்னாடி பேசிக்கலாம்என சொல்ல அவரை கைபிடித்துக்கொண்டு அவர் அறைக்கு இழுத்துச்சென்றவன் அங்கிருந்த கட்டிலில் அமரவைத்துவிட்டு

  

நான் வர்றவரைக்கும் நீங்க எங்கயும் போக கூடாது தாத்தாஎன சொல்லிவிட்டு அறைக்கதவை வெளிப்புறமாக தாப்பாள் போட்டுவிட்டு தன் அறையை நோக்கி ஓடினான் ரிஷி

  

அவசரமாக குளித்து ரெடியாகி வந்தவன் தாத்தாவின் அறை திறந்திருக்கவும் உள்ளே தாத்தா இல்லாமல் போனதைக்கண்டு கோபமடைந்தவன் அவசரமாக தாத்தாவிற்கு போன் செய்தான்

  

ஹலோ

  

ஏன் தாத்தா போனீங்க

  

டேய் என்னடா ஆச்சி உனக்கு பைத்தியமா நீ என்னை ரூம்ல அடைச்சிட்டு போனா என்னால வெளிய வரமுடியாதா

  

நான்தான் வரேன்னு சொன்னேனே தாத்தா

  

நீ ஏண்டா வரனும் உன்னையும் கூட்டிட்டு போனா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பொண்ணு மேல சந்தேகப்படுவாங்க அதனால நீ அங்கயே இரு நான் வேலையை முடிச்சிட்டு வரேன்

  

இப்ப நீங்க எங்க இருக்கீங்க

  

நான் அந்த பொண்ணு இருக்கற ஹாஸ்டல் தேடிப்போறேன்

  

அதான் அட்ரஸ் சொல்லுங்க நான் வரேன்

  

முடியாது நீ வராதஎன சொல்லிவிட்டு போனை கட் செய்தார் தாத்தா.

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.