(Reading time: 24 - 48 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

எதுக்குடா இப்படி பார்க்கற

  

பாவம் தாத்தா நீங்க இத்தனை வருஷம் எப்படித்தான் பாட்டியோட இருக்கீங்களோ

  

என்ன செய்றது ஆனா முன்னைவிட இப்ப உன் பாட்டி பரவாயில்லைடா ஆரம்பத்தில ரொம்ப ராங்கிகாரியா இருந்தா இப்ப பேரன்கள் வரவும் வயசும் ஆனதால ஓஞ்சிருக்கா இருந்தாலும் இன்னும் அவள் திமிரு குறையலைன்னா பார்த்துக்கயேன்என சொல்லிவிட்டு ரிஷியை பார்த்தவர்

  

சரி என்னை பத்தி விடு உன்னைப்பத்தி சொல்லு நந்தினியை உனக்கு பிடிச்சிருக்கு அப்படித்தானே

  

அப்படியெல்லாம் இல்லை

  

அப்ப உனக்கு அவளை பிடிக்கலை

  

நான் அப்படி சொல்லலையே

  

டேய் ஏதாவது ஒண்ணு சொல்லு நான் அர்ஜூன் கிடையாது நீ பண்ற டார்ச்சரை பொறுத்துக்க மாட்டேன். நீ என்கிட்ட இப்பவே தெளிவா சொன்னா நான் ஏதாவது ஒரு முடிவு எடுப்பேன் சொல்லு அவளை உனக்கு பிடிச்சிருக்கா பிடிக்கலையாஎன கேட்க ரிஷிக்கு தொண்டையடைத்தது. அவனால் எதையும் சொல்ல முடியாமல் திணறினான்

  

என்னடா ஆச்சி பதில் சொல்லுடா ஏன் பயப்படற அந்த பொண்ணு எதாவது சொல்லும்னு பயப்படறியா

  

என கேட்க

  

ஆமாம் தாத்தா அவள் மனசுல என்ன இருக்குன்னு தெரியாம நானா எதையாவது யோசிக்க பயமாயிருக்கு

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.