(Reading time: 24 - 48 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

நான் நல்லா பார்த்துக்குவேன் தாத்தா

  

இப்பவே உன்னால சரியான முடிவு எடுக்க முடியாம கஷ்டப்படற, இதுல நீ அவளை நல்லா பார்த்துக்குவியா முதல்ல நீ தெளிவாயிருக்கனும், ஆர அமர யோசி, அவள் உனக்கு தேவையான்னு யோசி முடிவு பண்ணபின்னாடி பின்வாங்க கூடாது, உனக்கு 5 நாள் டைம் இருக்கு அதுக்குள்ள நல்ல முடிவா எடு

  

அது என்ன 5 நாள் டைம்

  

ஆமாம் வீட்ல பார்த்திருக்க 3 பொண்ணுங்களையும் நான் 5 நாள் கழிச்சி வரசொல்லியிருக்கேன், அவங்க வந்ததும் அவங்களை இங்க 1 மாசம் தங்க வைக்கப்போறேன். பரிட்சை வைச்சி யார் இந்த வீட்டுக்கு ஏத்த மருமகள்ன்னு பார்த்து உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க நான் முடிவே பண்ணிட்டேன். இதுக்கு வீட்ல இருக்கறவங்க சம்மதம் சொல்லிட்டாங்க

  

நான் சம்மதிக்க வேணாமா

  

அப்ப சரி ஒண்ணு பண்ணு, உன்னால முடிஞ்சா இந்த போட்டியில நந்தினியை கலந்துக்க வை அவள் வந்தா உன்னை விரும்பறாள்னு அர்த்தம் இல்லைன்னா நான் சொல்ற பொண்ணை நீ கல்யாணம் பண்ணனும் வேற வழியில்லை, 5 நாள்தான் டைம் அதுக்குள்ள அவளை தேடிப்பிடிச்சி பேசி சரி பண்ணி வீட்டுக்கு வரவழைக்க பாரு, இதுக்கு மேல என்னால உனக்கு உதவி செய்ய முடியாது அவ்ளோதான் சொல்லிட்டேன்என உறுதியாக சொல்லிவிட்டு எழுந்தவர் வீட்டை நோக்கி நடந்தார் தாத்தா.

  

ரிஷிக்கோ 5 நாட்கள் என்பது குறைவாக தெரிந்தது, நந்தினியை தேடவேண்டும் அவள் மனதில் இருப்பதை அறிய வேண்டும் தன் மனதில் இருப்பதை சொல்ல வேண்டும் அவளை எப்படியாவது போட்டிக்கு வீட்டுக்கு வரவழைக்க வேண்டும் அவள் வருவாளா எங்கு இருக்கிறாள் என்ன செய்கிறாள் எப்படி அவளை அடைவது? என பலவாறான யோசனையில் மாட்டிக்கொண்டு தத்தளித்தான் ரிஷி.

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.