Page 17 of 29
“அப்ப நானு”
“உங்களுக்கென்ன நீங்களும் சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கப்போறீங்க தானே”
“ஆமாம் பண்ணிக்கத்தான் போறேன். ஆனா அதுக்கு முன்னாடி உன்கிட்ட ஒரு கேள்வி” என கேட்க அவளும் என்னவென்று அவனையே பார்த்தாள்
”உன்னைப்பத்தி என் மனசுல ஒருவிசயம் ஓடுது, அதை சொல்ல முடியாம தவிக்கிறேன். ஆனா உன் மனசுல என்னைப்பத்தி என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்க ஆசைப்படறேன்”
“என் மனசுல உங்களைப்பத்தின்னா அது வந்து நீங்க ரொம்ப நல்லவர்”
“வேற”
“அன்பா பேசறீங்க”
“வேற”
“எனக்கு பாதுகாப்பா இருக்கீங்க”
“வேற”
“எனக்கு தங்க இடம் கொடுத்தீங்க”
“ம் அடுத்து”
“எனக்கு அர்ஜூன் போல ஒரு அண்ணாவை கொடுத்தீங்க”
“ம்”