பொண்ணுங்களும் பெரிய பணக்கார வீட்டை சேர்ந்தவங்களாம், அதோட அவங்களை உங்க வீட்டு ஆளுங்கதான் கூட்டிட்டு வருவாங்களாம், அவங்களுக்குதான் அதிக வாய்ப்புகள் இருக்கும் என்கிட்ட எதுவுமே இல்லை, என்னால எப்படி முடியும் என்னை வீட்டுக்குள்ள கூட விடமாட்டாங்க”
“ஏன் உனக்குதான் அர்ஜூன்னு ஒரு அண்ணன் இருக்கானே அப்புறம் என்ன”
“அண்ணா உங்க கூட சேரக்கூடாதுன்னு சொல்லியிருக்காரு” என அவள் சொல்ல அவனின் கோபம் அவளைவிட்டு அர்ஜூன் மீது தாவியது. அவனை கொல்ல வேண்டும் என நினைத்தாலும் நந்தினிக்காக போனா போகட்டும் என விட்டுவைத்தான்.
பெருமூச்சுவிட்டபடி கண்களை மூடிதிறந்து நந்தினியை ஆசையாக பார்த்தான் ரிஷி. அவனது அந்த பார்வையை பார்க்க முடியாமல் தலை கவிழ்ந்தாள் நந்தினி. அவளை நெருங்கி அமர்ந்தவன் அவள் முகத்தை தன் இரு கைகளால் தூக்கி பிடித்தான்.
”நந்தினி உனக்கு எதுவும் இல்லைன்னாலும் பரவாயில்லை என்னை நம்பி வா”
“ஏன்”
“ஏன்னா நீ வரனும்னு நான் ஆசைப்படறேன்”
“எதுக்கு அதான் அந்த 3 பொண்ணுங்க இருக்காங்களே”
“அவங்களை நான் பார்க்கலை பார்க்கவும் எனக்கு விருப்பம் இல்லை. எனக்கு பிடிக்கலை”
“ஒரு வேளை அவங்களை பார்த்தா உங்களுக்கு பிடிக்கலாம்ல”
“இப்ப என்னதான் சொல்ல வர்ற”
“என்னை ஏன் வரசொல்றீங்க அந்த பொண்ணுங்களை பிடிக்காம போனதாலதானே”