Page 24 of 29
“எதுக்கு”
“என்னடா கேள்வி இது”
“சரி ஈசியான கேள்வி கேட்கறேன் பதில் சொல்லுங்க”
“கேளு”
”நந்தினியை உங்களுக்கு பிடிச்சிருக்கா”
“பிடிச்சிருக்கு”
“அவள் கூட இருந்தா உங்களுக்கு சந்தோஷமா”
ஆமாம்”
“அவளை நீங்க லவ் பண்றீங்களா”
“அப்படியெல்லாம் இல்லை”
“சரி வேணாம்”
“அவளைத்தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்படறீங்களா”
“அப்படி ஒண்ணும் கட்டாயம் இல்லை”
“அப்படிண்ணா நான் இப்பவே நந்தினிக்கு ஒரு கல்யாணம் செஞ்சி வைச்சிடறேன். அப்ப அவளும் போயிடுவா உங்களுக்கும் எந்த குழப்பமும் வராது”