“ஏன் இப்ப அவளுக்கு கல்யாணம் பண்ணிவைக்கனும்னு இருக்க”
“ஆமா நீங்க அவளை லவ் பண்ணலை கல்யாணம் பண்ணிக்கற எண்ணமும் வரலை. அப்ப அவள் யாரை கல்யாணம் பண்ணா உங்களுக்கு என்ன விடுங்க”
“அது முடியாது”
“இப்படி சொன்னா எப்படிண்ணா ஒன்னு ஒரு விசயத்தில தெளிவா முடிவு எடுங்க. அந்த 3 பொண்ணுங்களை பிடிக்காததால நந்தினியை நீங்க பார்க்கறது தப்பு. நந்தினியை கல்யாணம் பண்ணிக்கற ஐடியா இருந்தா சொல்லுங்க 5 நாள் கழிச்சி நானே அவளை கூட்டிட்டு தாத்தா வீட்ல விடறேன் அப்புறம் அவள் போட்டியில ஜெயிப்பாளா தோப்பாளா அதை பத்தி நாம யோசிக்க வேணாம் அவளுக்கு உதவி பண்ணா ஜெயிச்சிடப்போறா பிறகென்ன நீங்க ஆசைப்பட்டப்படி அவளை கல்யாணம் பண்ணி ஜாலியா குடும்பம் நடத்தலாம்”
“ஆனா அவளுக்கு என்னை பிடிக்கலையே”
“அப்படின்னு அவள் சொன்னாளா“
”இல்லை”
“அப்புறம் என்ன”
”என் கல்யாணத்தை பத்தி பேசினா அமைதியா இருக்கா”
“வேற என்ன செய்யனும்”
“என் மேல கோபமே வரலை”
”ஏன் வரனும்”