”வராதா அப்ப அவளை விட்டுட்டு வேற பொண்ணை கல்யாணம் பண்ணா கோபம் வராதா”
“வரும் அதுக்கு நீங்க நந்தினியை காதலிக்கிறேன்னு சொல்லியிருந்தா அப்ப வரும் நீங்க எதையுமே சொல்லாம அவளே எல்லாம் புரிஞ்சிக்கிட்டு செய்யனும்னா எப்படி”
“நான் சொன்னாதான் அவளுக்கு புரியுமா”
”ஆமாம் நீங்க தெளிவா சொல்லாம எதையோ நினைச்சிட்டு பேசினா எப்படி சொல்லுங்க”
“இப்ப என்னை என்னதான் செய்ய சொல்ற”
“ஒண்ணுமில்லை அவளுக்கு நீங்க டைம் கொடுத்தது போதும் முதல்ல நீங்க டைம் எடுத்து நல்லா யோசிச்சி முடிவு எடுங்க”
“எந்த முடிவை சொல்ற”
“ம் நல்ல முடிவுதான் நீங்க நந்தினியை லவ் பண்றீங்களா இல்லையான்னு முடிவு பண்ணி சொல்லுங்க. நீங்க சொன்னா நான் அவளை பத்தி ஒரு முடிவுக்கு வருவேன்”
“நான் லவ் பண்றேன்னு சொன்னா என்ன செய்வ”
“ம் தாத்தா கிட்ட கொண்டு போய் விடுவேன். அவரே முடிவு எடுக்கட்டும்னு விட்டுடுவேன்”
“நான் லவ் பண்ணலைன்னு சொன்னா”
“ஓ அதுவா உங்க பிரெண்டு கௌதம் இருக்கானே அவனை காலையில பார்த்தேன் நந்தினியை பத்தி என்கிட்ட நிறைய விசாரிச்சான். நானும் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கறதா சொன்னேன் ரொம்ப சந்தோஷப்பட்டான். உடனே சரின்னும் சொன்னான்”
“எதுக்கு சரின்னு சொன்னான்”