(Reading time: 7 - 14 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

  

தேங்க்ஸ் பவி...!” என மனைவியிடம் சொன்னவன், மற்றவர்கள் பக்கம் திரும்பி, “ஓகே நரேந்திரன் சார்... உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்றதுனே தெரியலை... ரொம்ப தேங்க்ஸ் ரஞ்சன், தேங்க்ஸ் விவேக்...” என்றான் உற்சாகத்துடன்!

  

இந்த பேச்சு நடந்த லிவிங் ரூமில் இருந்து சற்று விலகி அமர்ந்து, குழந்தைக்கு உணவு ஊட்டி விட்டுக் கொண்டிருந்த மாவிடம் பேசிக் கொண்டிருந்தாள் பாரதி. அவர்கள் இருவரும் இருந்த இடத்திற்கு சென்றாள் பவித்ரா.!

  

பாரு, நீ விவேக் கிட்ட ஏதாவது சொன்னீயா?”

  

கேள்வியுடன் தோழியைப் பார்த்த பாரதி, “எதை பத்தி பவி?” என்றாள்!

  

இவர் லோன் அப்ளை செய்திருந்தது பத்தி...”

  

இல்லையே பவி... நான் எதுவும் விவேக் கிட்ட சொல்லவே இல்லையே... ஏன்?”

  

விவேக் எதுக்கு இப்போ கம்பெனி டாப்பிக் ஆரம்பிச்சார்?”

  

ஹலோ! அண்ணாவோட திறமைப் பத்தி சொல்லி தானே விவேக் சொன்னார்! உனக்கு இருந்தாலும் ரொம்ப தானே பவி?”

  

ஆமாம் பவித்ரா, அவரை புகழ்ந்து தானே எல்லோரும் சொன்னாங்க,” என உமாவும் சொன்னாள்!

  

அதென்னவோ சரி தான்... அவரோட ஆசை நிஜமா மாறினா ரொம்ப சந்தோஷப்படுறது நான் தான்...”

  

பவித்ரா மனதில் இருப்பது பாரதிக்கு புரியாமல் இல்லை!

   

5 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.