மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி, மனைவியுடன் இருந்த பிரிவும் முடிவுக்கு வந்த மகிழ்ச்சியை தன் முத்தங்களால் வெளிப்படுத்தினான் விவேக்!
கிட்டத்தட்ட அதே மனநிலையில் இருந்த பாரதியும் அவனின் காதலை விருப்பத்துடன் ஏற்றுக் கொண்டாள்!
இருவரும் தங்களின் மனதில் நிறைந்திருந்த காதலின் துணையுடன் தங்களின் முதல் சண்டையை முடிவுக்கு கொண்டு வந்தார்கள்!
🌼🌸❀✿🌷
நள்ளிரவில், தூக்கத்தில் புரண்டுப் படுத்த பாரதியின் கரங்கள் தானாக அருகில் இருக்கும் கணவனை தேடியது. அங்கே விவேக் இல்லை என்பதை உணர்ந்து கண்களை தூக்க கலக்கதோடே திறந்துப் பார்த்தவள், கட்டிலில் சற்று தள்ளி அமர்ந்திருந்த விவேக்கை பார்த்து வேகமாக எழுந்து அமர்ந்தாள்.
“என்ன விவேக் என்ன ஆச்சு?”
பாரதியின் கேள்வியில் இருந்த பரபரப்பை கவனித்து புன்னகைத்த விவேக்,
“ஒன்னுமில்லை ரதி...” என்றான்!
“அப்புறம் ஏன் தூங்காம இருக்கீங்க?”
“தூங்கனும்...”
“என்ன விவேக்?”
பாரதியின் அருகில் நெருங்கி வந்து அமர்ந்த விவேக், அவளின் இடது கன்னத்தை
Nice episode