தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 81 - பிந்து வினோத்
81. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
இரவு உணவை முடித்தப் பின், ஏதோ நினைவு வந்தவனாக விவேக் ரமேஷிடம்,
“ரமேஷ், நீங்க மார்கெட்டிங்கில தானே இருக்கீங்க?” எனக் கேட்டான்.
“ஆமாம் விவேக்...”
“அவர் பேச்சை பார்த்தாலே தெரியலையா விவேக், நம்ம அப்பாவையே அசத்திட்டாரே,” என்றான் நிரஞ்சன்!
“ரொம்ப சரி ரஞ்சன்...! எனக்கு ஒரு ஐடியா ஃப்ளாஷ் ஆகி இருக்கு ரமேஷ்...”
“என்ன விவேக்? சொல்லுங்க...”
“நீங்க ஏன் சொந்தமாவே ஒரு மார்க்கெட்டிங் கம்பெனி ஸ்டார்ட் செய்யக் கூடாது?”
ரமேஷ் பதில் சொல்லாமல் மனைவி பக்கம் அவசரமாக ஒரு பார்வை பார்த்தான். பவித்ரா அவனின் பார்வையை கவனித்தப் போதும், கவனிக்காதது போல் திரும்பிக் கொண்டாள்.
ரமேஷின் அமைதியை தவறாக எடுத்துக் கொள்ளாமல் விவேக்கே தொடர்ந்துப் பேசினான்.
“அப்பா சொன்னதை கேட்டீங்க தானே, அப்பா பார்த்துட்டு இருந்த எல்லா ரெஸ்பான்ஸிபிலிட்டிசையும் எங்க இரண்டுப் பேரால மட்டும் கவனிக்க முடியாது... உங்களை மாதிரி அனுபவம் இருக்க ஹானஸ்ட் அன்ட் சின்சியர் பெர்சன் ஒருத்தர் எங்களுக்கு பக்கபலமா இருந்தா, ரொம்ப வசதியா இருக்கும்... உங்களுக்கு இன்ட்ரெஸ்ட் இருந்தா சொல்லுங்க...”
“ஆமாம் ரமேஷ், விவேக் சொல்றது சரி... உங்களுக்கு இன்ட்ரஸ்ட் இருந்தா, நீங்க புது கம்பெனி ஸ்டார்ட் செய்ய நாங்களே ஹெல்ப் செய்றோம்...” என்றான் நிரஞ்சன்!
“அதெல்லாம் எதுக்கு, வேண்டாமே...” என்றான் ரமேஷ் தயக்கத்துடன்!
Nice episode