(Reading time: 7 - 14 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

  

நாங்க ஒன்னும் உங்களுக்கு ஃப்ரீயா எதையும் செய்ய போறது இல்லையே... நீங்க எங்களுக்கு மார்க்கெட்டிங்க்ல உதவி செய்ங்க, நாங்க உங்களுக்கு உதவி செய்றோம்...”

  

அதுவரை அமைதியாக அவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த நரேந்திரன்,

   

சரின்னு சொல்லு ரமேஷ்... உன்னைப் போல திறமையான ஒருத்தன் என் பசங்களுக்கு உறுதுணையா இருக்கது எங்களுக்கும் கொஞ்சம் மனசுக்கு தெம்பா இருக்கும்,” என்றார்!

  

நரேந்திரன் சொன்னதைக் கேட்டு ரமேஷின் முகத்தில் மலர்ச்சி தோன்றியது... ஆனாலும் அவன் இப்போதும் உடனே பதில் சொல்லாமல், மனைவியைப் பார்த்தான்...

  

அதை கவனித்த விவேக்,

  

என்ன பவித்ரா நீங்க பாரதியை விட ஒரு படி மேல போல இருக்கே! ரமேஷ் எந்த கேள்வி கேட்டாலும் உங்க பக்கம் தான் பார்க்கிறார்,” என்றான் கேலியாக!

  

விவேக்கின் பேச்சில் பவித்ராவின் முகத்தில் மெல்லிய வெட்கம் எட்டிப் பார்த்தது! உடனே சமாளித்துக் கொண்டு,

  

என்ன விஷயம்ங்க?” என்று கணவனை கேட்டாள் பவித்ரா.

  

விஷயத்தை பகிர்ந்துக் கொண்ட ரமேஷ்,

  

நீ என்ன நினைக்குற?” என்று அவளை நேரடியாகவே கேட்டான்.

  

உங்களுக்கு பிடிச்சிருந்தா எனக்கு ஒரு பிரச்சனையுமில்லை...” என்றாள் பவித்ரா மெல்லிய தயக்கமான குரலில்.

  

மனைவியின் பதிலில் ரமேஷின் முகம் பளிச்சென்று மலர்ந்தது.

5 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.