ரமேஷ் மீது பவித்ராவிற்கு அதிக அன்பு இருந்தது, அவனின் திறமை மீது நம்பிக்கையும் இருந்தது. ஆனால், சுமுகமாக செல்லும் அவர்களின் வாழ்வில் குழப்பங்கள் ஏற்பட்டு விடக் கூடாதே என்றக் கவலையும் அவளிடமிருந்தது! அதனால் தான் சொந்த கம்பெனி தொடங்க வேண்டும் என்ற ரமேஷின் ஆசைக்கு அவள் ஊக்கம் கொடுக்கவில்லை! இப்போது விவேக் நிரஞ்சனின் உதவியுடன் ரமேஷின் ஆசை நிறைவேறினால் பவித்ராவிற்கு மகிழ்ச்சியே! ஆனால் அது பாரதியின் ரெகமென்டேஷன் எனும் ஷார்ட்கட் வழியாக வந்ததா என்ற கேள்வி தான் அவளை யோசிக்க வைத்திருந்தது!
தோழியின் மனதில் இருந்ததை துல்லியமாக ஊகித்த பாரதி, அவளுக்கு பதிலாக, “நீ தான் ரொம்ப சந்தோஷப்படுவேன்னு எனக்கு தெரியுமே பவி...” என்று சொல்லி விட்டு, பேச்சை மாற்ற,
“இன்னைக்கு உன்னுடைய சமையல் ரொம்ப சூப்பர் பவி... அசத்திட்ட...” என்றாள்.
“ஆமாம், ரொம்ப நல்லா இருந்தது பவித்ரா...” என உமாவும் பாராட்டினாள்.
அதன் பின் பாரதி விரும்பியதை போலவே அவர்களின் பேச்சு திசை மாறி சென்றது.
🌼🌸❀✿🌷
பேச்சின் மும்முரத்தில் எல்லோரும் இருக்க, விவேக்கும் பாரதியும் மட்டும் கடிகாரத்தை அவ்வப்போது பார்த்தப்படி இருந்தார்கள்! கடிகாரத்தை பார்க்காத நேரங்களில் பெரும்பாலான நேரம் ஒருவரை ஒருவர் பார்த்து ரகசியமாக புன்னகைத்துக் கொண்டார்கள்!
கற்பகம் கமலா ஒருபக்கம், நரேந்திரன், நிரஞ்சன், விவேக், ரமேஷ் நால்வரும் இன்னொரு பக்கம், தூங்காமல் விழித்திருந்த குழந்தைகள் நித்திலா நித்யாவுடன் விளையாடிக் கொண்டிருந்த மது மற்றொரு பக்கம், பாரதி, உமா, பவித்ரா என பெண்கள் வேறொரு பக்கம் இருந்து கதை பேசிக் கொண்டே இருந்தார்கள்!!!!! நேரம் போய் கொண்டிருந்ததே தவிர ஒருவரும் அசைவதாக தெரியவில்லை!
Nice episode