(Reading time: 7 - 14 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

இறுதியில், பொறுமை இழந்த விவேக், தூக்கம் வருவதாக சொல்லி விட்டு எழுந்து நடக்கவும், அதை கவனித்த பவித்ரா, பாரதியிடம்,

  

நீயும் தூங்கப் போறதா இருந்தா கிளம்பு பாரு...” என்றாள்.

  

அதற்காகவே காத்திருந்ததுப் போல பேருக்கு கூட மறுப்பு சொல்லாமல், சரி என்று ஏற்றுக் கொண்டு அங்கே இருந்து உடனே கிளம்பினாள் பாரதி.

  

அவள் போவதை ஆச்சர்யமாக பார்த்த பவித்ராவும், உமாவும் தங்களுக்குள் சின்ன புன்னகையை பரிமாறிக் கொண்டார்கள்.

  

பாரதி எப்போ இப்படி இம்ப்ரூவ் ஆனா பவி?”

  

எனக்கும் அதே ஆச்சர்யம் தான் உமா!”

  

சரி, அது இருக்கட்டும்! நீங்க எப்படி உங்க ஹஸ்பன்ட் மட்டும் இல்லாம மாமியாரையும் இப்படி கையில் போட்டு வச்சிருக்கீங்க, அந்த ரகசியத்தை சொல்லுங்க?”

  

பவித்ராவும், உமாவும், பாரதி, விவேக்கை மறந்து தங்களின் பேச்சில் ஈடுபட்டார்கள்.

  

பாரதியும், விவேக்கும், வெளியில் இருந்த உறவினர்கள், நண்பர்கள் மட்டும் அல்லாமல், மொத்த உலகத்தையே மறந்துப் போய் இருந்தார்கள்!

  

பாரதி அறைக்குள் வந்ததுமே அவளை தன் பக்கம் இழுத்து இறுக அணைத்துக் கொண்டான் விவேக். பாரதியும் அதற்காகவே காத்திருந்தவளாக இன்னும் அதிகமாக அவனுடன் நெருங்கிக் கொண்டாள்!

   

மாலையில் ஏற்கனவே மனம் விட்டு பேசி இருந்ததால் இப்போது அவர்கள் இருவருக்கும் பேச எதுவும் இருக்கவில்லை! பேசிக் கொண்டு இருக்க அவர்கள் இருவருக்குமே விருப்பமும் இருக்கவில்லை!

5 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.