(Reading time: 28 - 56 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

 நந்தினியின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது. அவளிடம் வந்த அந்த புதிய மளிகைகடையின் முதலாளியும்

   

”இன்னிக்கு முதல் நாள் நடந்த போட்டியில நீங்க ஜெயிச்சிட்டீங்க நாங்க சொன்னபடியே நீங்க போய் உங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கலாம் ஆனால் 2 நிமிஷம் தான் டைம் தருவோம் அந்த 2 நிமிஷத்துக்குள்ள உங்களால எவ்ளோ பொருட்கள் எடுக்க முடியுதோ அது மட்டும்தான் உங்களுக்கு சொந்தம் அதுக்கு நீங்க பணம் தரதேவையில்லை.” என சொல்ல அவளும் அந்த கடையை முழுவதுமாக ஒரு ரவுண்டு பார்த்து விட்டு வந்து கடையின் முதலாளியிடம் நின்றாள்

   

”நான் ரெடி நீங்க டைம் சொல்லுங்க” என சொல்ல அவரும் கடிகாரத்தை பார்த்து சரியாக முட்கள் ஒன்று சேர்ந்த உடனே கத்தினார். 

   

நந்தினியும் வேகமாக பொருட்களை எடுக்க ஆரம்பித்தாள். மளிகை பொருட்கள் காய்கறிகள் என 2 நிமிடத்தில் தன்னால் எவ்வளவு எடுக்க முடியுமோ அனைத்தும் ஒவ்வொன்றாக எடுத்து தன் பின்னால் சுற்றி வந்த அந்த கடையின் சர்வன்டிடம் தந்தாள். நேரம் முடிந்தது. அவள் வாங்கி வந்த பொருட்களை ஏற்ற காரில் இடம் இல்லை என்பதால் அதற்காக அந்த முதலாளியும் ஒரு குட்டியானை வண்டியில் பொருட்களை ஏற்றி அவள் சொன்ன முகவரிக்கு அனுப்பியும் வைத்தார்.

   

பைசா செலவில்லாமல் பொருட்கள் வாங்கிய சந்தோஷத்தில் நந்தினியும் காரில் ஏறி வீட்டை வந்து அடைந்தாள்.

   

கையாட்டிக்கொண்டு வந்து நின்ற நந்தினியை கண்ட தாத்தாவும் ரிஷியும் சந்தேகப்பட்டனர். அவள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை கண்டு அவர்களுக்கு குழப்பமே வந்தது. அதில் தாத்தா அவளிடம்

   

”அம்மாடி என்னம்மா எதுவும் வாங்கலையா ஒரு பொருளும் உன் கையில இல்லையே”

   

“நான் வாங்கிட்டேன் தாத்தா” என சொல்லி தனக்கு தந்த 1000 ரூபாயை தாத்தாவிடம் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.