(Reading time: 28 - 56 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

அதுக்குள்ள இப்படி மோசமாக செய்திருக்கியே”

   

”அது தாத்தா வந்து”

   

”நீயே எப்பவும் ஒரு டிஷ்தான் செய்வ அப்படியிருக்கறப்ப ஒண்ணையாவது உருப்படியா செய்யக்கூடாதா. என்னாச்சி உன் கவனம் சிதறிடுச்சா இப்படி மோசமான டிஷ்ஷை நான் இதுவரைக்கும் சாப்பிட்டதேயில்லை. இதை யாருக்கும் பரிமாற வேணாம் எடுத்துட்டு போயிடு” என சொல்ல அவளும் எடுத்து சென்றுவிட்டாள்.

   

அடுத்து வந்தனா நந்தினியை செய்வதை பார்த்து பார்த்து அவளும் அதே மெனுவையே செய்திருந்தாள். அனைவரும் சாப்பிட்டனர். அடுத்து மிருதுளா கார்லிக் சோயா சிக்கனும் மட்டன் குழம்பும் சாதமும் செய்திருந்தாள். இதில் சுறா புட்டு வேற சமைத்திருந்தாள். அதைப்பார்த்த தாத்தா

   

”எதுக்கும்மா இவ்ளோ நான் வெஜ் ஐட்டம் செஞ்சிருக்க”“

   

“அது தாத்தா நான் நிறைய வாங்கிட்டு வந்துட்டேன் அதான்”

   

“நிறைய வாங்கிட்டு வந்தா ப்ரிட்ஜ்ல இடம் இருக்காதே என்ன செஞ்ச”

   

“அது தாத்தா பிரிட்ஜ்லதான் ஒண்ணுமே இல்லையே அதனால நான் வாங்கி வந்த மொத்த நான்வெஜ் ஐட்டத்தையும் அடுக்கிட்டேன்“ என சொல்ல பாட்டி அலறினாள்

   

”அய்யோ ஏன் இப்படி செஞ்ச இப்ப பிரிட்ஜ் எல்லாம் நாறுமே அதுல வைச்ச மிச்ச பொருட்களும் சேர்ந்துல்ல நாறியிருக்கும்” என சொல்ல மிருதுளா

   

”இல்லை பாட்டி வேற எந்த பொருளும் இல்லை நான் நிறயை இறைச்சி மீன் வாங்கிவந்ததால அதை வைக்கவே இடம் இல்லாம போச்சி. அதனால தான் பிரிட்ஜ்ல வைக்க முடியாத இந்த சுறா சிக்கன் மட்டன் வைச்சி டிஷ் பண்ணிட்டேன் பாட்டி” என சொல்லவும் பாட்டி நொந்தே போனார். தாத்தாவிற்கு சிரிப்பாக வந்தது 

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.