வெளியே வந்தாள். தாத்தாவிற்கு ஒரு காபிகப் தந்துவிட்டு அவள் தாத்தாவிடம்
”தாத்தா உங்க சொந்தக்காரங்க எங்க இருக்காங்க” என கேட்க
“கிராமத்திலயும் இருக்காங்க இங்க இந்த ஊர்லயும் இருக்காங்க”
“அவங்க வீட்டுக்கு நீங்க போறதில்லையா”
“போவோமே ஏதாவது விழா விசேஷம்ன்னு வந்தா போவோம் ஏன்ம்மா கேட்கற”
“இல்லை தாத்தா சும்மாதான் கேட்டேன் சொந்தக்காரங்க வீட்டுக்கு வந்தாலே சந்தோஷமாயிருக்கும்ல அதை நினைச்சி கேட்டேன் சரிங்க தாத்தா நான் டின்னர் செய்யப்போறேன்” என சொல்லிவிட்டு அவள் சென்றுவிட தாத்தா அவள் சொன்னதையே திரும்ப திரும்ப யோசிக்கலானார். அவள் சொன்னதை வைத்து தாத்தா அடுத்த நாளுக்கான போட்டியை முடிவு செய்துவிட்டார்.
வழக்கம் போல் அனைவரும் டின்னர் சாப்பிட்டு முடித்த கையோட ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்த தாத்தா தன் எதிரே 4 பெண்களையும் அமரவைத்து பேசலானார்
”இன்னிக்கு உங்க 4 பேருக்கும் நான் வைச்ச போட்டியில ஜெயிச்சது நந்தினிதான். காரணம் உங்களுக்கே தெரியும் அதனால பெரிசா நான் சொல்ல தேவையில்லை அதனால நான் மத்தவங்களைப்பத்தி பேசறேன். இப்ப சோனா உன்னோட மார்க் 70 தான் காரணம் 1000 ரூபாய்க்குள்ள செலவு செய்ய சொல்லிதான் நான் சொன்னேன் ஆனா உன்னால அந்த 1000 ரூபாயக்குள்ள உன் செலவுகளை குறைச்சிக்க முடியலை.
”ஆனா தாத்தா அதுக்கான காரணத்தைதான் நான் சொல்லிட்டேனே”
“ஆமாம்மா நீ சொல்லிட்ட ஆனா அது தப்பில்லையா. உனக்கு தந்த பணத்தில நீ மிச்சம் கொண்டு வந்திருக்கனும் ஆனா செய்யலை. கொடுத்த பணத்தை விட அதிகமா செலவு செஞ்சிருக்க அதுவும் தப்புதானே. ஒரு நாளைக்கு தேவையானதை வாங்க சொன்னா நீ