(Reading time: 28 - 56 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

அதிகமா தேவையில்லாத சாஸ்கள் சீஸ்கள்னு வாங்கிட்டு வந்து இருக்க. கேஸ் சிலிண்டர் இல்லாதப்ப சாலட் சான்ட்விச்னு செய்து அசத்தின இன்னிக்கும் அந்த மாதிரி செலவுகளை குறைச்சி நீ செய்திருந்தா முதல் மார்க் வந்திருப்ப”

   

“சாரி தாத்தா கடைக்கு போனேன் அங்க நிறைய சாஸ்கள் இருந்துச்சி வீட்ல இல்லை சரின்னு வாங்கிட்டு வந்துட்டேன்”

   

”எப்பவும் வரவுக்கு ஏத்தமாதிரிதான் செலவு செய்யனும் நீயே பெரிய பிசினஸ்வுமேன் உனக்கு பணத்தோட அருமை தெரியும் ஆனா நீயே பணம் இருக்குன்னு ஆடம்பரமா செலவு செஞ்சிருக்ககூடாது ஒரு மனைவியானவ கணவன் தர்ற சம்பளத்துக்குள்ளயே செலவும் செஞ்சி சேமிக்கவும் செய்யனும் ஆனா அது உன்கிட்ட இல்லை பரவாயில்லை ஆனா உன்னை நீ மாத்திக்கனும் சரியா”

   

“சரிங்க தாத்தா” என சொல்லி சோனா சோகமானாள்.

   

அடுத்து தாத்தா வந்தனாவைப்பார்த்து பேசுவதற்குள் அவளே ஆரம்பித்தாள்

   

”தாத்தா நீங்க சொன்ன மாதிரியே நான் செலவுகளை குறைச்சி 5 ரூபாய் மிச்சம் கூட கொண்டு வந்திருக்கேன் தாத்தா” என பெருமையாக பேச

   

”உண்மைதான் ஆனா நீ எதுக்காக அந்த பொருட்களை வாங்கின”

   

“அது இன்னிக்கு ஒரு நாள் சமைக்கறதுக்காக தாத்தா”

   

“ஆனா நீ காலையில செஞ்சதும் சரி இப்ப டின்னர்க்காக நீ செஞ்சதும் நல்லாவேயில்லையே எப்படி”

   

“அது தாத்தா வந்து”

   

“நான் சொல்லவா நீ வாங்கி வந்த பொருட்கள் எல்லாம் தரமான சரக்கு இல்லை. உன் புத்திசாலித்தனத்துக்காக தான் இந்த போட்டியே வைச்சது. ஆனா நீ உங்கம்மாவுக்கு போன் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.