(Reading time: 28 - 56 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

பெயர்கள்

சோனா    வந்தனா    மிருதுளா    நந்தினி

சமையல்    100    0    30    100

ஒழுக்கம்     60    10    30    90

சுபாவம்    50    20    10    80

பணிவு    50    30    30    80

புத்திசாலித்தனம்    100    20    0    100

அனுசரித்தல்    60    20    20    80

சகிப்புதன்மை    50    10    30    90

மொத்தம் 700க்கு    470    110    150    620

   

அந்த அட்டவனையில் தங்களது மதிப்பெண்களைப்பார்த்து  4 பெண்களில் சோனாவும் நந்தினியும் மிகவும் சந்தோஷப்பட்டனர். மீதி இருவரின் முகமும் வாடிவிட்டது.

   

தாத்தா அந்த மார்க்குகளை எழுதிவிட்டு திரும்பி அவர்களை பார்த்தார்

   

”இந்த நாள் இதோட முடிஞ்சிடுச்சி. நான் இந்த மாதிரி மார்க் எழுதறதை முதல் நாள்ல இருந்தே வைச்சிருந்தா உங்களுக்குள்ள போட்டி மனப்பான்மையாவது வந்திருக்கும் நீங்களும் இந்த போட்டியை போட்டியா நினைச்சி மதிச்சிருப்பீங்க ஆனா நான் செய்யாம போனதுக்கு காரணம் உங்களுக்குள்ள வெறுப்பு வந்துட கூடாதுன்னுதான். 

   

ஆனா இனிமேல இந்த போர்டு இங்கதான் இருக்கும் உங்களுக்கான மார்க்கும் அந்த நாள் முடிவுல எழுதப்போறேன் மாசம் கடைசி நாள்ல மொத்த மதிப்பெண்களையும் வைச்சி யார் ஜெயிக்கறாங்களோ அவங்களுக்குதான் ரிஷியை கல்யாணம் செய்து வைப்பேன் புரிஞ்சதா 

   

இனிமேலயாவது விளையாட்டுத்தனமா இல்லாம பொறுப்பா இருக்கற வழியை பாருங்க போகலாம் போய் தூங்குங்க நாளைக்கு காலையில சீக்கிரமா எழுந்துடுங்க 7 மணிக்கெல்லாம் நீங்க எல்லாரும் ரெடியாகி என் முன்னாடி இருக்கனும் இப்ப கிளம்புங்க” என சொல்ல அந்த 3 பெண்களும் தங்கள் அறைகளுக்கு சென்றுவிட நந்தினி மட்டும் அனைவருக்கும் பால் கொடுத்துவிட்டு ரிஷிக்கும் நட்ஸ் பால் கொடுத்து சிரித்துவிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டாள். அவளின் அந்த சிரிப்பைக்கண்ட அர்ஜூனுக்கு பக்கென்றது. அவன் மெதுவாக ரிஷியிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.