”தங்கச்சி ஏன் உங்களை பார்த்து வித்தியாசமா சிரிக்குது” என கேட்க அதற்கு ரிஷி வெட்கப்பட்டான்
”எதுக்கு இப்படி செய்றீங்க பார்க்க சகிக்கலை என்னாச்சி நான் இல்லாதப்ப என் தங்கச்சியை என்ன செய்தீங்கண்ணா” என கோபமாக கேட்க
”நான் எதுவும் செய்யலைடா அவள் கொண்டு வந்து கொடுத்த பாயாசம்தான் வேலையை செஞ்சிச்சி நான் வேணாம் வேணாம்னு தான் சொன்னேன் அவள்தான் கேட்கலை”
“எதுக்காக நீங்க வேணாம்னு சொன்னீங்க”
“அதுக்குதான்”
“அதுக்குன்னா எதுக்கு”
”சீ போடா எனக்கு வெட்கமா வருது” என சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்றுவிட ரிஷி நந்தினியின் செயல்பாடுகளை நினைத்து தலைமுடியை பிய்த்துக்கொண்டான் அர்ஜூன்
தாத்தாவோ சுசித்ராவிடம்
”அம்மாடி வீட்ல இருக்கறவங்களை காலையில ரெடியாக சொல்லிடு 7 மணிக்கெல்லாம் எல்லாரும் ரெடியா இருக்கனும் அப்படியே உன் புருஷன் கிட்ட சொல்லிடு நாளைக்கு ஒரு நாள் கம்பெனிக்கு லீவு போட சொல்லு”
“என்ன விசயம் மாமா“
“சொந்தக்காரங்களை பார்க்க கிராமத்துக்கு போறோம்”
“என்ன மாமா திடீர்ன்னு”