“இதுவும் போட்டிதான்ம்மா இந்த 4 பொண்ணுங்களும் நம்ம சொந்தக்காரங்களை எப்படி மதிக்கறாங்கன்னு பார்க்கத்தான் இந்த விசயத்தை யார்கிட்டயும் சொல்ல வேணாம் நான் கிராமத்துக்கு போன் பண்ணி வர்ற விசயத்தை சொல்லிட்டேன் அவங்க நமக்காக காத்திருப்பாங்க நீ யாருக்கும் சொல்ல வேணாம் கிராமத்தில விசேஷம்னு சொல்லி ரெடியாக சொல்லு”
“சரிங்க மாமா கிராமத்துக்கு போனா குலதெய்வம் கோயிலுக்கும் போகனும்னு சொல்வாங்க பொங்கல் வைக்க சொல்வாங்களே மாமா”
“ஆமாம்ல சரி ஒரு நாள் சொந்தக்காரங்க வீட்ல தங்கிட்டு பொங்கல் வைக்கிறத அடுத்த நாள் போட்டியா வைச்சிக்கலாம்”
“போட்டியா“
“ஆமாம் கோயில்ல செய்ய வேண்டிய வேலைகளை அந்த 4 பொண்ணுங்களுக்கும் செய்ய வைச்சி பார்க்கலாம்”
“என்ன மாமா இது பாவம் அவங்க”
“இருக்கட்டுமா போட்டிதானே கட்டாயம் இல்லையே அதான் நான் 3 வாய்ப்பு கொடுத்திருக்கேனே பார்க்கலாம்”
“சோனாவால முடியாதுன்னு நினைக்கிறேன்”
“சரி மத்தவங்க இருக்காங்கள்ல”
“சரிங்க மாமா என்னவோ செய்ங்க நான் போய் எல்லாருக்கும் சொல்லிடறேன்”
”சரிம்மா” என சொல்லிவிட சுசித்ரா சென்றுவிட்டார். அவர் சென்றதும் தாத்தா தனக்குள்