(Reading time: 28 - 56 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

பண்ணி அவங்க சொன்னதை வைச்சி ஹோல் சேல் கடையில வாங்கின விலை குறையும்ன்னு வாங்கி வந்து சமைச்சிருக்க ஆனா என்னாச்சி ஒரு டிஷ் கூட ருசியாவும் ஹெல்த்தியாவும் இல்லை. ஏம்மா எதுக்காக நீ உன் அம்மாவுக்கு போன் பண்ண. வீட்ல இருந்து வளர்ந்த பெண் தானே நீ உன் வீட்ல இருக்கறவங்க பொருட்கள் வாங்க எங்க போவாங்க எந்த கடையிலிருந்த பொருள் வாங்குவாங்கன்னு தெரியாதா” என கேட்க

   

”தெரியும் தாத்தா ஆனா நாங்க பெரிய கடைகள்லதான் சரக்கு வாங்குவோம் நீங்க தந்த 1000 ரூபாய்க்குள்ள வாங்கனும்னு தான் ஓல் சேல் கடைகளுக்கும் சந்தைக்கும் போனேன் தாத்தா”

   

”ஆக ஏதோ ஒரு மட்டமான சரக்கை வாங்கினாலும் பரவாயில்லை இந்த போட்டியில நீ ஜெயிக்கனும்னு நினைச்சிட்ட அப்படித்தானே”

   

“தாத்தா அப்படியில்லை அது என்னாச்சின்னா”

   

“ஒண்ணும் சொல்ல வேணாம் நீ செஞ்ச முதல் தப்பு உன் புத்திசாலித்தனத்தை உபயோகிக்காம உன் அம்மாகிட்ட உதவி கேட்டிருக்க. அடுத்து தரமான பொருட்களை வாங்காம போட்டியில ஜெயிக்கறத ஒரு வெறியா நினைச்சி கண்டதை வாங்கிட்டு வந்து சமைச்சிருக்க அதனால நீ செய்த சமையலும் கேவலாமா போச்சி இப்படி சாமான் வாங்கி கேவலமா சமைக்கறதா உன் புத்திசாலித்தனம், திறமை சொல்லும்மா 

   

நீ சதாரணமா அரசி வாங்கி அதுல தயிர் சாதம் தேங்காய் சாதம்னு செஞ்சி சிம்ப்ளா கொடுத்திருந்தா கூட நான் எதையும் சொல்லியிருக்க மாட்டேனே இதுல நந்தினி என்ன செய்றாள்னு பார்த்து அவளை மாதிரியே நீ செய்திருக்க அதுவும் தப்பு நான் ஆரம்பத்திலயே சொன்னேன் மத்தவங்களை பார்க்க கூடாதுன்னு இனிமே இந்த தப்பை பண்ணாத நீ வாங்கி வந்த சரக்கை எல்லாம்  தூக்கி குப்பையில போடு” என சொல்லவும் வந்தனாவிற்கு கண்கள் கலங்கியது. இருந்தாலும் தான் தோற்றுவிட்டதாக யாரும் கருதிவிடக்கூடாதென தன்னை சமாதானமாக்கிக்கொண்டாள் வந்தனா

   

அடுத்து மிருதுளாவிடம் பாய்ந்தார் தாத்தா

   

”உன் மனசுல என்ன இருக்குன்னு எனக்கு புரியலை. இப்பவும் சொல்றேன் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.