(Reading time: 28 - 56 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

அருந்ததியிருக்காள்னு நினைச்சி ஏனோதானோன்னு இருக்காதம்மா சரியா”

   

“தாத்தா நான் எதையும் செய்யலையே”

   

“நான் உன் கூட வேலையாளை அனுப்பினது எதுக்காக.”

   

“என்னோட தேவைக்கு”

   

“தேவைக்கு இல்லை உன்னோட துணைக்கு உன்னை பத்திரமா கூட்டிட்டு வரனும்னு தான் அனுப்பிவைச்சேன். அவன்கிட்ட விசாரிச்சி இந்த வீட்டுக்கு தேவையானதை வாங்கற கடைகளுக்கா போயிருக்க அது தப்பு இதுல புத்திசாலித்தனம் எங்க இருக்கு உனக்கு தானாவே வரனும் இப்படி டிரைவர்கிட்டயும் வேலைக்காரன்கிட்டயும் கேட்டுக்கிட்டு போக கூடாது. சரி அதை விடு நான்வெஜ் சாப்பிடறது உன்னோட லட்சியமா இருக்கட்டும் அதுக்காக ஒரு நாளுக்கான உணவுக்கு நீ அவ்ளோ அசைவமா வாங்கிட்டு வருவ. பிரிட்ஜ் திறந்து பார்த்தேன். அவ்ளோ வாங்கியிருக்கியே அவ்ளோவையுமா இன்னிக்கு ஒரு நாள்ல காலி பண்ணிட போற”

   

“இல்லை தாத்தா நான் போனேன் பார்த்தேன் நல்லாயிருந்திச்சி அதான் வாங்கிட்டேன்”

   

”ஆனா ஒரு நாளைக்கு தேவையானதைதான் நான் வாங்கிட்டு வர சொன்னேன் இப்படி ஒரு மாசத்துக்கு தேவையானதை வாங்கிட்டு வர சொல்லலை. அசைவம் வாங்கின பணத்தில பாதிக்கு நீ காய்கறிகளை வாங்கியிருந்திருக்கலாமே ஏன் வாங்கல”

   

“அது தோணலை தாத்தா”

   

“எப்படி தோணும் இப்படி நான்வெஜ்ஜா சாப்பிட்டா எப்படித்தான் தோணும். இனிமே இப்படியிருக்காத இந்த மாசத்தில நிறைய பண்டிகைகள் வருது. தெலுங்கு வருட பிறப்பு வருது ராம நவமி வருது. ஏன் பௌர்ணமி அமாவாசை வெள்ளி சனின்னு நிறைய நாட்கள் வருது. இப்பவே எல்லாருக்கும் சேர்த்தமாதிரி சொல்லிடறேன். இந்த மாதிரி பூஜை நாட்கள்ல அசைவம் செய்யக்கூடாது சாப்பிட கூடாது இது இந்த வீட்ல எப்பவும் நடக்கற ஒரு விசயம் இதை இப்ப இருந்தே நீங்க பழகிக்குங்க. 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.