“தாத்தா தந்த பணத்தில மிச்சம் கொண்டு வர நினைச்சேன் ஆனா பத்து பைசா செலவில்லாம 2 மாசத்துக்கு தேவையான சாமான்களோட நான் வந்துட்டேன் அப்ப தாத்தா என்னைப்பார்த்து பெருமையா சிரிச்சாரே நீங்க அந்த சிரிப்பை பார்த்தீங்களா அத்தான்” என கேட்க ரிஷியோ அவளை நெருங்கி அவளது கன்னத்தில் தன் விரலால் கோலம் போட்டுக்கொண்டு
”நான் உன்னை தவிர வேற யாரையுமே பார்க்கலை. என் கண்ணுக்கு நீ ஜெயிச்ச சந்தோஷம்தான் தெரிஞ்சது. இதோ இந்த சிரிப்புதான் தெரியுது. உன் முகமே சிவந்து போச்சி இந்த சிவப்பு என்னை கொல்லாம கொல்லுது நந்தினி” என அவளை அப்படியே படுக்கையில் சாய்த்தவன் அவளது கன்னத்தில் முத்தம் தர அவளும் அவனுக்கு முதல் முறையாக கன்னத்தில் தானாக முத்தம் தந்தாள்.
அதைக்கவனித்த ரிஷி அவளை இன்னும் தன்னுடன் நெருக்கி அணைத்துக்கொண்டு அவளுக்கு தன்னால் முடிந்த அனைத்து இன்பங்களையும் தடையில்லாமல் வாரி வழங்கிக்கொண்டிருந்தான். நேரம் போனதே இருவருக்கும் தெரியவில்லை. மாலை 6 மணிக்குதான் இருவருக்கும் தங்கள் சுயநிலை தெரிய அவசரமாக எழுந்தார்கள். நந்தினிக்கு வெட்கம் தாங்க முடியவில்லை. அவள் ரிஷியிடம்
”உங்க கிட்ட வந்தாலே நேரம் போறதே தெரியலை பாருங்க இப்ப 2 மணி நேரமாச்சி. அண்ணா என்னை தேடிட்டு இருப்பாரு”
“அவன் வெண்ணிலாவை பார்க்க போயிருக்கான் நீ பயப்படாத வா” என அழைக்க
“போங்க அத்தான் தாத்தா தேடுவாரு” என தனது உடைகளை சரிசெய்துக்கொண்டு அவன் அறையை விட்டு வெளியே சென்றவள் தன் அறைக்கு சென்று குளித்துவிட்டு மீண்டும் ஹாலுக்கு வர தாத்தா அவளிடம்
”என்னம்மா நல்ல தூக்கம் போல” என சாதாரணமாக கேட்க
”ஆமாம் தாத்தா” என சொல்லிவிட்டு அவள் கிச்சனுக்குள் சென்று காபி போட்டுக்கொண்டு