(Reading time: 28 - 56 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

   

ரிஷியோ முகத்தை கோபமாக வைத்துக்கொண்டு தன் அறையில் படுத்திருந்தான். நந்தினியின் செய்கை அவனை குழப்பியது

   

”என்னாச்சி நந்தினிக்கு எனக்கு தராம ஏன் போனா ஒருவேளை பாயாசம் காலியாயிடுச்சா. தாத்தாவுக்கு ஏன் தரனும் இந்த வயசுல தாத்தா பாயாசம் குடிச்சா என்ன குடிக்காட்டி போனா என்ன விடவேண்டியதுதானே” என மனதுக்குள் திட்டிக்கொண்டு இருந்தவன் அறைக்கதவை தட்டிவிட்டு நந்தினி கையில் பாயாச டம்ளருடன் நின்று இருந்தாள். சத்தம் கேட்டு வாசலை பார்த்தவன் நந்தினி சிரித்தவாறே நிற்பதைக்கண்டு 

   

”என்ன வேணும்” என எரிந்து விழ அவள் பாயாசத்தை காட்டினாள்

   

”இப்ப எதுக்கு கொண்டு வந்த எல்லாருக்கும் கொடுத்துட்டு இப்பதான் உனக்கு என் ஞாபகம் வந்துச்சா” என கத்த அவள் மெதுவாக உள்ளே வந்து கதவை சாத்தி தாப்பாள் போட்டவள் அவனிடம் நெருங்கி வந்தாள்

   

”அத்தான் ஏன் கோபப்படறீங்க உங்களுக்காக ஸ்பெஷலா செஞ்சி தனியா கொடுக்கலாம்னு நினைச்சி கொண்டு வந்தேன் அத்தான் இந்தாங்க” என வெட்கப்பட்டுக்கொண்டு கொஞ்சி கொஞ்சி பேசவும் ரிஷியின் கோபம் காற்றோடு கரைந்து போய் அவளிடமிருந்த பாயாசத்தை வாங்கியவன் அதை குடிக்க ஆரம்பித்தான். நந்தினி அவன் குடிப்பதைப்பார்த்து விட்டு அவன் பக்கத்தில் நெருங்கி அமர்ந்தவள் 

   

”அத்தான்” என அழைத்தாள் அவளின் இந்த ஆசையான பார்வையும் குழைவான குரலிலும் தன்னை இழந்தவன் அவளிடம்

   

”அன்பே” என்றான்

   

”இன்னிக்கு நான் ரொம்ப சந்தோஷமாயிருக்கேன் அத்தான்”

   

”நானும் தான்”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.