(Reading time: 28 - 56 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

தந்துவிட்டு நின்றாள்

   

”பணம் கொடுத்திட்டா எப்படி பணம் இல்லாம பொருளை எப்படி வாங்கின” என கேட்க அதற்கு அவள் போஸ்டரை காட்டி நடந்ததை சொன்னாள். அவள் சொல்லி முடிக்கும் முன்பே அவள் வாங்கிய பொருட்கள் வீட்டுக்குள் கொண்டு வரப்பட்டு ஹாலில் அடுக்கப்பட்டது. 2 மாதத்திற்கு தேவையான அனைத்து மளிகை சாமான்களும் 10 நாட்களுக்கு தேவைப்படும் காய்கறிகளும் வாங்கியிருந்தாள். அவளின் புத்திசாலித்தனத்தை மெச்சிய தாத்தாவும் ரிஷியும் மிகவும் சந்தோஷப்பட்டனர். ஆனால் நந்தினியோ டிபன் செய்ய வெறும் 15 நிமிடம்தான் இருக்கறது என தெரிந்ததால் தாத்தா தன்னை பாராட்டுவதற்கு முன்பே அவரிடம்

   

”தாத்தா நேரம் குறைவா இருக்கு நான் போய் டிபன் செய்றேன் நான் வாங்கி வந்த இவ்ளோ பொருளும் வைக்க கிச்சன் பத்தாதே தாத்தா இப்ப என்ன செய்றது” என கேட்க

   

”உனக்கு இப்போதைக்கு டிபனுக்கு என்ன தேவையோ அதை எடுத்துக்கிட்டு போய் சமைக்கற வழியை பாரு. இதை என்ன செய்யனும்னு நான் பர்த்துக்கிறேன்” என சொல்லிவிட்டு அவளை அனுப்ப அவளும் அவசரத்திற்கு ரவா உப்புமா தான் செய்ய முடியும் என நினைத்தவள் அவசரமாக அதற்கு தேவையானதையும் அதற்கான சட்னி செய்ய தேவையானதையும் எடுத்துக்கொண்டு கிச்சனுக்கு சென்று சமைக்கலானாள்.

   

மணி 10.30 ஆனது. 

   

வீட்டில் இருந்தவர்களும் டிபன் சாப்பிட வந்தமர்ந்தார்கள். 

   

4 பெண்களும் அதற்குள் டிபன் செய்து முடித்திருந்தார்கள்.

   

முதலில் சோனா தான் செய்த பிரட் ஆம்லெட்டும் சைனீஸ் எக் பிரைட் ரைஸ்ம் செய்து கொண்டு வந்து பரிமாறினாள்.

   

இன்று ஆர அமர அவள் சமைத்த காரணத்தால் அவளின் உணவு ருசியாகவும் அளவுகள் சரியாகவும் இருந்தது. தாத்தாவும் மற்றவர்களும் சாப்பிட்டு அதை மெச்சிக்கொண்டனர். தாத்தாவும்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.