ஆனால், அவனுக்கே உரிய முறையில், நண்பன் அறியாமல் குழப்பத்தை மறைத்து,
“ஏன் விக்ரம், நீ இன்னைக்கு பிஸியாடா?” என அக்கறையுடன் வினவினான்.
“உனக்கு இல்லாத டைமா சஞ்சீவ்? என்னடா விஷயம்?”
“பெரிசா எதுவும் இல்லைடா. எனக்கு மைலாப்பூர் பக்கம் வேலை இருக்கு, ஹாஸ்பிட்டல் விசிட் செய்யனும், அப்படியே உன் ஆஃபிஸுக்கும் வரலாமேன்னு தான்...”
“டேய், இதெல்லாம் கேட்கனுமா என்ன? எப்போ வேணுமோ வாடா.”
அடுத்த பதினைந்து நிமிடத்தில் விக்ரமின் அலுவலகத்தில் இருந்தான் சஞ்சீவ். அவனை வரவேற்று பழச்சாறு கொடுத்து உபசரித்தான் விக்ரம். பின்,
“நீ வந்தது நல்லதா போச்சு சஞ்சீவ்! இந்தா செக், நீயே உன் ஒய்ஃப் கிட்ட கொடுத்துறு,” என சொல்லி ஒரு செக்கை நீட்டினான் விக்ரம்.
மறுக்காமல் அதை வாங்கிய சஞ்சீவ்,
“இப்போ எனக்கு முழு விஷயத்தை சொல்றீயா?” என்றான் அமைதியாக!
“என்ன விஷயம்டா மச்சான்? விவரமா சொன்னால் தானே என்ன கேட்குறேன்னு எனக்கு புரியும்!”
“இந்துவை உனக்கு எப்படி தெரியும்? அவளுக்கும் இந்த பிஸ்னஸ்க்கும் என்ன
{/f90filter}
சம்மந்தம்?”
“விளையாடுறீயா என்ன? இன்னுமா உனக்கு தெரியாது?”
“டேய், தேவை இல்லாம என்கிட்டே வாங்கி கட்டாதே! தெரிஞ்சு இருந்தா உன்னை ஏன்டா கேட்கிறேன்?”