தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 09 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
பக்கத்தில் இருந்தவர்களுக்கு தெரியாத விதத்தில் உதயின் மெசேஜை படித்தாள் துளசி.
'அண்ணி, ட்ரெயின் ஸ்டேஷன் வந்தாச்சே, என் குவீன் வந்தாச்சா?'
'வந்தாகி விட்டது, மஹாராஜா!' என்று பதில் அனுப்பி வைத்தாள் அவள்.
உடனேயே உதயிடம் இருந்து பதில் மெசேஜ் வந்து சேர்ந்தது.
'சென்னையே அழகாகி விட்டது! சிலு சிலுவென ஆகி விட்டது!!! இன்னும் ஒரே ஒரு ஹெல்ப் அண்ணி! நாளைக்கு முதல் நாள் வேலைக்கு வரும் போது மஹாராணியை மறக்காமல் சாரீயில் வர சொல்லுங்க... ப்ளீஸ்!!!'
காமாட்சியுடன் பேசிக் கொண்டிருந்த தோழியை மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்த துளசி,
'முயற்சி செய்றேன்! இப்போ ஒழுங்கு மரியாதையாக வேலையை செய். இதுக்கு மேல் நோ மெசேஜஸ்' என்று பதில் அனுப்பி விட்டு, மொபைலை எடுத்து பைக்குள் வைத்து விட்டு மற்ற இருவரின் பேச்சில் கலந்துக் கொண்டாள்.
அப்போது தொடங்கிய அவர்களின் பேச்சு காரில் மாட்டுமில்லாமல் வீட்டிற்கு சென்ற பின்பும் தொடர்ந்துக் கொண்டே இருந்தது.
பேசியது மூவர் என்ற போதும், பெரும்பாலும் வளவளத்துக் கொண்டிருந்தது நந்திதா தான்! அவளுக்கு வாய் வலிக்காதா என காமாட்சி யோசிக்கும் அளவிற்கு பேசிக் கொண்டே இருந்தாள்!
அவளின் பேச்சைக் கேட்டு சிரித்து சிரித்து மற்ற இருவருக்கும் வயிற்று வலியே வந்து விட்டது!
பேச்சின் நடுவே, "ஆனாலும் நந்து, நீ அநியாயத்துக்கு பொய் சொல்ற," என்றாள் காமாட்சி.