"என்ன எல்லோரும் இப்படி அமைதியா சாப்பிடுறீங்க?" என்றாள்.
சரத், துளசி, காமாட்சி மூவரும் அவள் பக்கம் பார்த்தார்களே தவிர எதுவும் சொல்லவில்லை.
ராஜசேகர் பக்கம் பார்த்த நந்திதா, "என்ன அங்கிள், நீங்க தானா கல்ப்ரிட்? உங்களுக்கு சாப்பிடும் போது பேச பிடிக்காதா?" என வினவினாள்.
"ஒரே நேரத்துல இரண்டு வேலை செய்ய முடியுமா? சாப்பிடும் போது வாய்க்கு வேலை இருக்கு, அப்புறம் எதுக்கு எக்ஸ்ட்ராவா பேசுற வேலை வேற?" என்றார் ராஜசேகர்.
"எனக்கு மல்டி டாஸ்க்கிங் செய்யாம எதுவுமே நடக்காது அங்கிள்... இன்னைக்கு ஒரே ஒரு நாள் அட்ஜஸ்ட் செய்துக்குறீங்களா?"
ராஜசேகர் நந்திதாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு உணவு உண்பதை தொடர்ந்தார்.
அதை சம்மதமாக எடுத்துக் கொண்ட நந்திதா,
"நான் ஒரு கேள்வி கேட்குறேன், தெரிஞ்சவங்க பதில் சொல்லுங்க... சரியா?" என்றாள்.
மற்றவர்கள் அதற்கு பதில் சொல்ல காத்திருக்காமல், தன் கேள்வி கணைகளை தொடங்கினாள்.
"ஒருத்தர் துணி துவைக்குற இடத்துல போய் பால் இருக்கான்னு கேட்டார், ஏன்???? சொல்லுங்க பார்ப்போம்...."
"ஏன்னா அவருக்கு கண்ணு தெரியாது..." என்றான் சரத்.
"இல்லை... துளசி, ஆன்ட்டி, அங்கிள்???"