"நீ ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுற? ஞாபகம் எல்லாம் இருக்கு. சரத்தோட கசின் தானே அவன்? துள்ளுவதே இளமை பட தனுஷ் மாதிரி குட்டியா, ஒல்லியா இருப்பானே, சரியா?"
நந்திதாவைப் பார்த்து முறைத்த துளசி, "ஆமாம், இவ பெரிய நயன்தாரா! வந்துட்டா சொல்ல," என்றாள் கோபத்துடன்!
"என்ன நீ, அவனை சொன்னால் இவ்வளவு கோபப்படுற?"
நந்திதா கேட்டப் பிறகே ‘ஓவர் ரியாக்ஷன்’ கொடுத்து விட்டதை புரிந்துக் கொண்ட துளசி, "அது அது... என்ன இருந்தாலும் அவன் என்னோட ப்ரதர் இன் லா ஆச்சே," என்றாள் நிலைமையை சமாளிக்க!
"அதுக்கு நான் என்ன செய்ய ஒசிமம்?"
"ஒன்னும் செய்ய வேண்டாம் தாயே! நீ அவனோட கம்பெனின்னு தெரிஞ்சுக்க சொன்னேன், அவ்வளவு தான்!"
"தெரிஞ்சுக்கிட்டேன்... இப்போ விஷயத்துக்கு வா... நாளைக்கு நான் என்ன செய்ய? எந்த ட்ரஸ் போட?"
"அதை அப்புறம் டிசைட் செய்வோம், இப்போ சாப்பிட வா. எல்லோரும் உனக்காக காத்துட்டு இருக்காங்க."
"அடிப்பாவி இதை முதலேயே சொல்றதுக்கு என்ன? ரொம்ப பசிக்குது... வா, வா போகலாம்..." என நந்திதா துளசியின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு நடந்தாள்.
உணவறையில் ராஜசேகரின் அருகே காலியாக இருந்த நாற்காலியில் நந்திதா அமர்ந்துக் கொள்ள, துளசி அனைவருக்கும் பரிமாறி விட்டு அமர்ந்து உண்ண தொடங்கினாள்.
ஒரு சில நிமிடங்கள் 'பொறுமையாக' அமைதியாக இருந்த நந்திதா,