"பொய்யா? நானா? என்ன ஆன்ட்டி சொல்றீங்க? எனக்கு பொய் எப்படி இருக்கும்னு கூட தெரியாதே!"
"துளசி பத்து நிமிஷம் உன்னோட பேசுவான்னு சொன்னீயே, அப்போ எப்படியும் அவ வாயை திறக்க கூட நீ வாய்ப்பே கொடுத்திருக்க மாட்ட, அப்போ நீ சொன்னது பொய் தானே?"
"இல்லை ஆன்ட்டி! நான் பேசினது போக, அவளுக்கு நான் கொடுக்குற பத்து நிமிஷம் அது... நான் ஒரு ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் பேசுவேன்... அவ்வளவே அவ்வளவு தான்..."
"அதானே பார்த்தேன்...." என்றாள் காமாட்சி சிரிப்பு பொங்க.
அன்றைய நாள் பொழுது சென்றதே தெரியாத அளவிற்கு அவர்களின் அரட்டை தொடர்ந்தது.
காமாட்சியின் கணவர் ராஜசேகர், சரத் இருவரும் அலுவலகத்தில் இருந்து வந்த பின்பு அவர்களின் அரட்டை கச்சேரிக்கு தற்காலிக ஒய்வு கொடுக்கப் பட்டது.
துளசி அவளுக்கென தந்திருந்த அறையில் இருந்த நந்திதா, மறுநாள் அலுவலகத்திற்கு அணிந்து செல்ல உடையை தேர்வு செய்யும் 'கடினமான' வேலையில் ஈடுப்பட்டிருந்தாள்.
அதே நேரத்தில் நந்து என்றழைத்தபடி துளசி வந்தாள்.
"தேங்க் யூ ஒசிமம், நல்ல டைம்ல வந்த! நாளைக்கு எந்த ட்ரஸ் போடுறதுன்னு குழப்பமா இருக்கு. இந்த ரெட் என்னோட ஃபேவரைட். ஆனால் முதல் நாள் சிகப்பு கலர் சரியா இருக்குமா? இந்த க்ரீன் ஓகேவா?"
நந்திதா காட்டிய உடைகளை பார்வையிட்ட துளசி,
"அப்படி உனக்கு முதல் நாள் சென்டிமென்ட் நிஜமாவே இருந்தா, சாரீ கட்டிட்டு போ... ஒரு சாரீ வச்சிருக்கீயே," என்றாள்.