"கட்டிட்டுப் போகலாம், ஆனால் நான் தடுக்கி விழுந்து ஏற்படுற டேமேஜுக்கு எல்லாம் யார் காசு கட்டுறது? அப்புறம் நீ பெங்களூருக்கே கிளம்பும்மான்னு துரத்திட்டாங்கன்னா என்ன செய்றது?"
"ஆமாம், அப்படி துரத்த தான் வேலை மெனக்கெட்டு உன்னை வர வச்சிருக்காங்க..."
"என்னத்த வர வச்சாங்க? ஒரு ஃப்ளைட் டிக்கட் கொடுத்திருக்க கூடாது? ஏ.சி சேர் கார்! எனக்கு முதுகெல்லாம் வலிக்குது!"
"உன்னை எல்லாம் பிருந்தாவன் எக்ஸ்ப்ரஸ்ல செகன்ட் சிட்டிங்ல வர சொல்லி இருக்கனும், அப்போ தெரியும்."
"போ ஒசிமம்! உனக்கு இந்த கஞ்ச பிஸ்னாரி மேனேஜரே பரவாயில்லை!"
"நந்து, நீ வேலை செய்ய போறது யாரோட கம்பெனின்னு உனக்கு தெரியுமா? நம்ம கூட காலேஜ்ல படிசான்னே உதய், அவனோடது..." துளசி, நந்திதாவை நேராக பார்த்தப்படி பேசினாள்.
"உதயா??? அப்படி நம்ம க்ளாஸ்ல யாரும் இல்லையே?"
"நம்ம கிளாஸ் இல்லை, நம்ம ஜூனியர்! நாம தர்ட் இயர்ல இருந்தப்போ நமக்கு ஹெல்ப் செய்தான்..."
துளசி தயக்கத்துடன் தான் அதை சொன்னாள். நந்திதாவிற்கு சந்தோஷை நினைவு படுத்தி விட கூடாதே என்ற கவலை அவளுக்கு.
"ஹ்ம்ம்ம்.... அது யார் அவன்?"
"ஹேய், உனக்கு ஞாபகமே இல்லையா?"