“அதுவும் சரி தான்,” என்ற விக்ரம், ஒரு சில வினாடிகள் இடைவெளி விட்டு பேசினான்,
“நீ என் கிட்ட பிஸ்னஸ் ஆரம்பிக்க போறேன்னு சொல்லி பணம் இன்வெஸ்ட் செய்ய முடியுமா கேட்ட சமயத்தில, இந்து சிஸ்டரோட கம்பெனி ஆடிட்டர் என்னை சந்திச்சு, அவங்களுக்கும் இந்த பிஸ்னஸ்ல ஆர்வம் இருக்குன்னு சொல்லி பேசினார். உன் பிஸ்னஸ் சர்க்கிள்ல விசாரிச்சு என்னைப் பத்தி தெரிஞ்சிக் கிட்டதா சொன்னார். நான் இன்னும் உன் பிஸ்னஸ்ல இன்வெஸ்ட் செய்றதா வேண்டாமான்னு டிசைட் செய்யலைன்னு சொன்னேன். அப்போ தான், நான் தரது மாதிரி சிஸ்டர் தர பணத்தை இன்வெஸ்ட் செய்ய சொன்னார். எனக்கு முதல்ல சந்தேகமா இருந்தது. அப்புறம் நேராவே இந்து கிட்ட பேசினேன். அவங்க பணம் கொடுத்து நீ புது பிஸ்னஸ் தொடங்கினா நல்லா இருக்காதுன்னு சொல்லி என்னை ப்ரெயின் வாஷ் செய்து சம்மதிக்க வச்சாங்க... உன் கிட்ட சும்மா பேச்சு வாக்கில் கேட்டப்போ நீயும் இந்துவை விரும்புறதா சொன்ன, சரின்னு அவங்க பணத்தை தான் உனக்கு கொடுத்தேன். இதெல்லாம் உனக்கே இப்போ தெரிஞ்சு இருக்கும்னு நினைச்சேன்டா! சாரி...”
“சாரி எல்லாம் எதுக்குடா மச்சான்? மேடம் என் கிட்ட எதுவும் சொல்லலை, இன்னைக்கு போய் கலாட்டா செஞ்சுடுவோம்ல,” என்றான் சஞ்சீவ் மனதில் இருந்த உணர்ச்சிகளை வெளியில் காட்டிக் கொள்ளாமல்!
“உனக்கு கோபம் எல்லாம் இல்லையே?”
“இதுல கோப பட என்னடா இருக்கு?”
“அப்போ சரி!”
நண்பனின் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த சஞ்சீவின் மனதில் பல விதமான எண்ணங்கள் அலை மோதிக் கொண்டிருந்தது. அவனின் சுயமரியாதைக்கு மதிப்பு கொடுத்து, அவனிடம் எதுவும் சொல்லாமல், நேராக விக்ரமை அணுகி இந்து
{/f90filter}உதவி இருப்பது அவனுக்கு புரிந்தது. ஆனால், அவர்களுக்குள் இத்தனை சச்சரவுகள் வந்தப் போதும் இந்து ஒரு முறை கூட இதைப் பற்றி சின்னதாக கூட கோடிட்டு காட்டாதது தான் சஞ்சீவை பெரிதும் பாதித்தது.