சஞ்சீவ் மகிழ்ச்சியோடு ராஜீவிற்கு வாழ்த்து சொல்லி விட்டு, அம்மா மற்றும் அண்ணியின் அருகில் அமர்ந்து காஞ்சனாவுடன் பேசிக் கொண்டிருந்த கீதாவிடமும் தன் மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டான். மரியாதைக்காக கீதாவின் அண்ணன் மற்றும் அப்பாவிடம் சில வார்த்தைகள் பேசி விட்டு, மனைவியை கண்களால் தேடினான் சஞ்சீவ்.
ஆனால் இந்துவை அங்கே எங்கும் காணவில்லை. உடை மாற்றி வருவதாக சொல்லி எழுந்தவன், நேரே மாடிக்கு போகாமல் கலாவிடம் கதை பேசிக் கொண்டிருந்த கண்மணியிடம்,
“கண்மணி, இந்து எங்கே?” எனக் கேட்டான்.
ஊரிலேயே இருக்கிறேன் என்று சொன்ன கண்மணியை, இந்து தான் மேல் படிப்பு படிக்க சொல்லி மீண்டும் அழைத்து வந்திருந்தாள். சஞ்சீவின் கேள்வியை கேட்டு கண்மணியும் கலாவும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டார்கள். பின் சஞ்சீவை பார்த்து,
“இந்து அக்கா, செம பிஸி அத்தான்... இன்னைக்கு டின்னர்க்கான சமையல் முழுக்க அவங்களே செய்றாங்க,” என்றாள் கண்மணி.
“அவ மட்டும் தனியாவா சமையல் செய்றா?”
“ஆமா... கீதா அக்காவை கிச்சன் பக்கமே போக கூடாதுன்னு அத்தை ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாங்க.... கலா தான் இந்து அக்காக்கு கொஞ்சம் ஹெல்ப் செய்துட்டு இருந்தா. எனக்கு ரொம்ப போர் அடிச்சதா அதான் நான் அவளை இங்கே அழைச்சிட்டு வந்துட்டேன்!”
போர் அடிக்கிறதா? அடிக்கும்! மனதில் எழுந்த கோபத்தை அடக்கிய சஞ்சீவ், சில மணி நேரங்களுக்
{/f90filter}
கு முன் நண்பனின் மூலம் தெரிந்துக் கொண்ட விஷயத்தை நினைத்து பார்த்தான். அவனுக்கு வருத்தமாக இருந்தது.
கடைசியில் அவன் ஒரு அன்ட்டி-ஹீரோ தானா?
🌼🌸❀✿🌷