(Reading time: 6 - 11 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

   

அன்று இரவு, உணவறையில் சஞ்சீவ் இந்துவை சந்தித்தப் போது அவள் முகத்தில் சோர்வுக்கான அறிகுறி எதுவுமே இல்லை. எப்போதும் போல பளிச்சென்று இருந்தாள்!

   

கீதாவின் அம்மா வசந்தி பேச்சு வாக்கில் அவ்வப்போது இந்துவை மட்டம் தட்டி பேசியதோடு, அவளின் சமையலை பற்றி சின்ன சின்ன குறைகளை சொல்லிக் கொண்டே இருந்தாள். இந்துவிடம் அதற்கு எல்லாம் எந்த விதமான ரியாக்ஷனும் இல்லை. யாரோ யாரையோ சொல்வதுப் போல் எந்த வித உணர்ச்சியும் காட்டிக் கொள்ளாமல் இருந்தாள். கீதாவிற்கு தான் சங்கடமாக இருந்தது. பல நாட்கள் கழித்து சந்தித்திருந்த அம்மாவை விட்டுக் கொடுக்க முடியவில்லை, அதற்காக தோழியை தேவை இல்லாமல் அதே அம்மா சீண்டுவதும் அவளுக்கு பிடிக்கவில்லை. ராஜீவை என்ன செய்வது என்பது போல் பார்த்தப்படி இருந்தாள்.

   

கீதாவே அவளின் அம்மாவிடம் எதுவும் சொல்லாத போது, ராஜீவ் என்ன என்று சொல்வது? கண்மணி பல்லைக் கடித்துக் கொண்டிருந்தாள். காஞ்சனா கீதாவிற்காக என மனதில் நினைத்துக் கொண்டு அமைதியாக இருந்தாள். ஆனால் இந்துவை பார்த்து கண்களால் நான் இருக்கிறேன் என்பதுப் போல் சைகை செய்தாள். மற்றவர்களை போல் வசந்தியின் பேச்சை கண்டும் காணாமல் நடந்துக் கொள்ள சஞ்சீவால் முடியவில்லை. முதலில் பொறுமையாக இருந்தவன்,

   

“அப்பா... என்ன காரம்? இப்படி எல்லாம் என் பொண்ணு இந்த நேரத்தில் சாப்பிட்டா என்ன செய்றது?” என்று மீண்டும் வசந்தி தொடங்கவும், மற்றவர்கள் யாரும் எதுவும் சொல்ல போவதில்லை என்பதை புரிந்துக் கொண்டு பேசினான்.

   

“அத்தை, அது இந்து எனக்கு ஸ்பெஷலா செய்தது... அது தான் அண்ணி பக்கம் வைக்காம எனக்காக இங்கே வச்சிருந்தா. நீங்க தெரியாம அதையும் எடுத்துட்டீங்க போலருக்கு. ஆனால் கவலையே படாதீங்க, சீக்கிரமே சமையலுக்கு ஒரு ஆள் ரெட

{/f90filter}ி செய்றேன்... அண்ணிக்கு பிடிச்சதா தினமும் செய்து கொடுத்து அசத்திடுவோம்,” என்றான்.

   

“என்ன தான் ஆனாலும் வேலைக்காரங்க செய்றது எல்லாம் சரி பட்டு வருமா என்ன?”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.