(Reading time: 5 - 10 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

சஞ்சீவ் பேசிக் கொண்டே இன்னும் இந்துவின் அருகில் வர, “ஹலோ, வெயிட்... சும்மா சும்மா பக்கத்துல் வராதீங்க,” என்றாள் இந்து!

   

“ஏன்?”

   

“அது அப்படி தான்...”

   

“ரொம்ப பேசினேன்னு வை, அஹிம்சை கை விட்டுட்டு, வன்முறைக்கு மாற வேண்டியது தான்.”

   

“அது சரி, நான் கராத்தேல ப்ளாக் பெல்ட், ஞாபகம் இருக்கா?”

   

“எனக்கு ஞாபகம் இருக்கோ இல்லையோ, உனக்கு எல்லாத்தையும் மறக்க செய்ற விதம் எனக்கு தெரியும்.”

   

“ம்ம்ம்ம்... அப்படி ட்ரை செஞ்சு என் கிட்ட வாங்கின அடியும் ஞாபகம் இருக்கனுமே...”

   

இந்து நினைவுப் படுத்திய விஷயத்திற்காக கோபப் பட நினைத்த சஞ்சீவ், அவளின் உதட்டில் இருந்த புன்னகையை பார்த்து அந்த எண்ணத்தை உடனே கைவிட்டான்... அவனின் கண்கள் காதலுடன் மனைவியின் அழகை அள்ளிப் பருகியது!

   

அதை கவனித்த இந்து, “ஹலோ! என்ன ரொம்ப ஓவரா லுக் விடுறீங்க? நான் உங்க கிட்ட பேச வேண்டிய விஷயம் நிறைய இருக்கு... இப்போ ஒழுங்கு மரியாதையா ஆஃபிஸுக்கு கிளம்புங்க, சாயங்காலம் பேசுவோம்,” என்றாள்.

   

“ஆபீஸா??? ஈவ்னிங்கா??? இந்து, இது உனக்கே தப்பா தெரியலையா? சரி, உன் இஷ்டப் படி ஈவ்னிங் பேசுவோம்... இப்போ மத்த வேலை எல்லாம்..” சஞ்சீவ் சொல்லி முடிக்க

{/f90filter}

ும் முன், அருகில் இருந்த மேஜை மீது இருந்த புத்தகத்தை எடுத்து அவனை அடித்தாள் இந்து.

   

“அடிப்பாவி, நல்லப் பொண்ணு மாதிரி பாவமா முகத்தை வச்சுட்டு செய்றதை எல்லாம் பார்...”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.