தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 11 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
இள நீல நிற சட்டையும், கருநீல பேன்ட்டும், கோட்டும் அணிந்திருந்த உதய் அவனின் அலுவலகத்தினுள் வெகு ஆர்வத்துடன் நுழைந்தான்.
அவனின் மனம் மகிழ்ச்சியில் துள்ளி குதித்துக் கொண்டிருந்தது...
எதிரில் வந்தவர்கள் சொன்ன 'குட் மார்னிங்கை' தலை அசைத்து ஏற்றுக் கொண்டு நடந்தவன், நேராக தன்னுடைய அறைக்கு சென்று அமர்ந்தான்.
முதல் வேலையாக மேஜையின் மீதிருந்த பஸ்ஸரை அழுத்தினான்.
அவனுடைய காரியதரிசி கோகிலா, உள்ளே வந்தாள்.
"குட் மார்னிங் சார்!"
"குட் மார்னிங் கோகிலா... நான் கேட்ட ஃபைல் எங்கே?"
"போன மாசத்துல இருந்து இன்னைக்கு வரைக்கும் வேலைக்கு சேர்ந்தவங்க டீடைல்ஸ் இருக்க ஃபைல், இங்கே வச்சிருக்கேன் சார்," என்ற கோகிலா, உதயின் டேபிளின் ஓரத்தில் இருந்த நீல நிற ஃபைலை சுட்டிக் காண்பித்தாள்.
அதை கவனித்து தலை அசைத்த உதய், "குட்... தேங்க்ஸ் கோகிலா," என்றான்.
கோகிலா அறையை விட்டு செல்ல, கதவு மூடும் வரை காத்திருந்த உதய், அவசரமாக அந்த நீல நிற ஃபைலை கையில் எடுத்து திறந்து, தேடினான்... அதில் கடைசியாக நந்திதாவின் தாள் இருந்தது.
அங்கிருந்த புகைப்படத்தில் அழகாக சிரித்துக் கொண்டிருந்தாள் அவள்...
அவளின் படத்தில் இருந்து கண்ணை எடுக்க முடியாமல், இமைக்காமல் பார்த்திருந்தான் அவன்...