அவனையும் அறியாமல், அவனின் விரல்கள் மிகவும் மென்மையாக நந்திதாவின் புகைப்படத்தை வருடியது...
"நதி.... என் பக்கத்துல வந்துட்ட..." என்று அவனின் உதடுகள் முணுமுணுத்தது...
நந்திதா என்று அவள் பெயர் டைப் செய்யப் பட்டிருந்த இடத்திற்கு அருகே உதய் என்று எழுதினான்....
"மிஸர்ஸ் நந்திதா உதய்...! கேட்கவே எவ்வளவோ ஸ்வீட்டா இருக்கு நதி!!!!"
தன்னுடைய நாற்காலியில் இருந்து எழுந்து சென்று, இடதுப் பக்கம் இருந்த ஜன்னலை மூடி இருந்த ப்ளைன்ட்ஸை (blinds) மெல்ல திறந்தான்...
சிறிய இடைவெளி விட்டு தெரிந்த அறையில் நந்திதா இருந்தாள்... நீல நிற சேலையில் நீல தேவதையாக மின்னிக் கொண்டு இருந்தாள்.
அவனின் நிறுவனத்தின் ப்ரொடக்ஷன் டிபார்ட்மென்ட் தலைவி நாகலட்சுமி அவளிடம் மும்முரமாக எதையோ விளக்கி கொண்டிருந்தாள்... அதை நந்திதாவும் கவனத்துடன் கேட்டுக் கொண்டிருந்தாள்....
'நதி என்னை பாரேன்.... ஒரே ஒரு தடவை பாரேன்...!'
'அட லூசு உதய், இப்போது உன்னை பார்த்தால் அவள் என்ன நினைப்பாள்? ஜன்னல் வழியாக பெண்களை சைட் அடிப்பதாக நினைப்பாள்! அவள் என்று இல்லை, உன் எம்ப்ளாயீஸ் யார் பார்த்தாலும் உன்னை தப்பாக தான் நினைப்பார்கள்...'
மனதின் அதட்டல் உண்மை என்று தோன்றவும், ப்ளைன்ட்ஸை மூடி விட்டு மேஜையிடம் மீண்டும் வந்தான் உதய். அங்கே இருந்த கார்ட்லஸ் ஃபோன் கண்ணில் படவும் அவனுக்கு ஒரு ஐடியா தோன்றியது...