ஃபோனை கையில் எடுத்துக் கொண்டு, மீண்டும் அதே கண்ணாடி ஜன்னலின் அருகே சென்றான்...
ஃபோனில் பேசுவதுப் போல பாவனை செய்தபடி, ப்ளைண்ட்ஸை திறப்பதும் மூடுவதுமாக இருந்தான்...
இப்போது வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவன் ஃபோன் பேசியபடி தன்னை மறந்து அந்த ப்ளைன்ட்ஸை திறந்து மூடுவதாக தோன்றும்!!!
‘என்னை இப்படி லூசு மாதிரி தனியா புலம்ப வச்சுட்டீயே நதி.... என்ன கண்ணு... என்ன அழகு கன்னம்... யூ ஆர் ஸோ பியூட்டிஃபுல்!’
ப்ளைன்ட்ஸ் திறப்பதும் மூடுவதுமாக நந்திதா உதயின் கண்ணில் தோன்றி தோன்றி மறைந்துக் கொண்டிருந்தாள்.
"உன்னை பார்த்துட்டே இருக்க நான் இமைக்காமல் இருப்பேன். இது இந்த ப்ளைண்ட்ஸ்க்கு தெரியுதா பாரேன்.... மூடி மூடி என்னை உன்னை பார்க்க விடாமல் என் கிட்ட இருந்து மறைக்குது..."
"எனக்கு இவ்வளவு பக்கத்துல வந்துட்டீயே நதி... இன்னும் நெருக்கமா எப்போ வருவ?"
"உன் கிட்ட நான் பேசனுமே... புதுசா வர எம்ப்ளாயீஸ் எல்லாம் என்னை மீட் செய்யனும்னு ரூல்ஸ் போட்டிருக்கனுமோ? சரி பரவாயில்லை, நானே உன் கிட்ட வந்து பேசுறேன்... இப்போ ஒரே ஒரு தடவை என்னை பாரேன்... ப்ளீஸ் நதி... என் பக்கம் பாரேன்... என் செல்லம்ல..."
உதயின் ஆசை நந்திதாவின் உள் மனதுக்கு தெரிந்ததாலோ, அல்லது, அவளையே ஒருவன் பார்த்துக் கொண்டிருப்பது, பெண்ணாகிய அவளின் உள்ளுணர்ச்சிக்கு புரிந்ததாலோ, நந்திதா திரும்பி உதய் நின்றிருந்த திசையில் பார்த்தாள்.