"சின்ன குருவி தலையில பனங்காய் வைக்குற மாதிரி எனக்கு இது ரொம்ப பெரிய பொறுப்பு மேடம். கட்டாயம் என் மேல வச்சிருக்க நம்பிக்கையை காப்பாத்த முயற்சி எடுத்துப்பேன். நூறு சதவிகிதம்னு இல்லை, இருநூறு சதவிகிதம் உழைப்பை நீங்க என்கிட்டே இருந்து எதிர்பார்க்கலாம்," என்றாள் நந்திதா உண்மையான ஆர்வத்துடன்.
"உங்க ரெஸ்யூம் பார்த்தே அது புரிஞ்சது நந்திதா... பை த வே, மேடம் எல்லாம் வேண்டாம், நாகுன்னு கூப்பிடுங்க..."
நாகலட்சுமி பேசிக் கொண்டிருக்கும் போது, ஒரு, "எக்ஸ்க்யூஸ் மீ," யுடன் அந்த அறையினுள் வந்தான் உதய்.
நாகலட்சுமி எழுந்து, "குட் மார்னிங் உதய்," என்று வாழ்த்த, நந்திதாவும் தானாக எழுந்து நின்றாள்.
நாகலட்சுமி சொன்ன ‘உதய்’ காதில் விழுந்திருந்ததால், எதிரில் நின்றவனை கண்கள் விரிய ஆச்சர்யத்துடன் பார்த்தாள்.
துளசி சொல்லி இருந்ததால் உதயின் உருவம் ஏதோ புகை வடிவமாக அவளுக்கு நினைவில் இருந்தது. ஆனால் அந்த உருவத்திற்கும், இப்போது அவள் பார்ப்பவனுக்கும், தப்பு தப்பு, பார்ப்பவருக்கும் எந்த ஒற்றுமையும் அவளுக்கு தெரியவில்லை...
துறுதுறுவென்ற கூர்மையான பார்வை...
கச்சிதமான நாசி...
நேர்த்தியான முக வடிவம்...
அழகான மீசை...