உதய்க்கு சிலிர்த்தது...!
❀✿❀✿❀✿
ஏதோ ஒரு உந்துதலில் நாகலக்ஷ்மியிடம் இருந்து பார்வையை திருப்பிய நந்திதாவின் கண்களுக்கு, திறந்து மூடிக் கொண்டிருந்த ப்ளைன்ட்ஸ் மட்டுமே தெரிந்தது.
அதன் பின் யாரோ நிற்பது புரிந்தது, ஆனால் யார் என்ன என்று தெரியவில்லை.
அவளின் கவனம் சிதறியது ஒரு சில வினாடிகள் மட்டுமே, மீண்டும் தானாக அவளின் பார்வையும், கவனமும் நாகலக்ஷ்மியின் பேச்சின் பக்கம் சென்றது.
நாகலட்சுமி அந்த கம்பெனி பற்றியும், புதிதாக தொடங்க இருக்கும் டிபார்ட்மென்ட் பற்றியும் நந்திதாவிற்க்கு விளக்கி கொண்டிருந்தாள்.
நதி எம்படட் சாப்ட்வேர் இந்தியா ப்ரைவேட் லிமிட்டட் சிறப்பான வளர்ச்சி கொண்ட கம்பெனியாக இருந்தது. பல பெரிய நிறுவனங்களுக்கு கடினமான போட்டி கொடுத்துக் கொண்டிருந்தது. அதை இன்னும் மேம்படுத்த விரும்பும் அந்த நிறுவனத்தின் இளம் தொழில் அதிபர், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறை (research & development – R&D) ஒன்றை தொடங்கி இருக்கிறார்.
அந்த புது டிபார்ட்மென்ட்டில் நந்திதா தான் முதல் எம்ப்ளாயீ.
"நான் இப்போ ப்ரொடக்ஷன் பார்த்துக்குறேன் நந்திதா. உங்களுக்கு கொஞ்ச நாள் கம்பெனியோட நடைமுறைகள் புரிய நான் உதவி செய்வேன். அப்புறம் இது முழுக்க முழுக்க உங்களோட குழந்தை. நம்ம எம்.டி உதய் இந்த டிபார்ட்மென்ட் மேல ரொம்ப எதிர்பார்ப்பு வச்சிருக்கார். அதனால தான் பணத்தை பத்தி கவலை படாமல் புது டிபார்ட்மென்ட் ஆரம்பிச்சதோட, திறமை ஆனவங்களை மட்டுமே இங்கே சேர்க்கனும்னு ஆர்வத்தோட இருக்கார்... கொஞ்ச நாளைக்கு நீங்க என் கிட்ட ரிப்போர்ட் செய்வீங்க, அதுக்கு அப்புறம் நேரா உதய் கிட்ட ரிப்போர்ட் செய்வீங்க..."